ஏழ்மையில் வாழ்வோருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்

தாமான் ஹெலாங் ஜாலான் புக்கிட் பஞ்சோரை சேர்ந்த தனித்து வாழும் தாய்மாது ரத்னா சாமிநாதன்,55 ரிம300.00-ஐ மாத வருமானமாக கொண்டு தனது வாழ்க்கையை வழிநடத்துகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளும் உடல்பேறு குறைந்த அவலநிலையிலும், மேலும் ஐந்து பேரப்பிள்ளைகளுடன் ஏழ்மையான சூழலில் வாழ்ந்து வருகிறார்.

ஏழ்மையில் வாழும் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டினார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ.

ஓர் உணவகத்தில் உதவியாளராக பணிப்புரியும் ரத்னாவின் குடும்ப செலவுகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் பணச்சுமையை எதிர்நோக்குகின்றார். இதனை கேட்டறிந்த ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ அக்குடும்பத்தை நேரில் சென்றுப் பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினருடன் மாநில சமூகதுறையின் சமத்துவ பொருளாதார திட்ட ஒருங்கிணைப்பாளரும் உடன் வருகை புரிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சூன் லிப் சீ ரத்னாவின் குடும்பத்தினருக்கு மாநில சமத்துவ பொருளாதார திட்டத்தின் மூலம் உதவியை கிடைக்க துணைப்புரிவதாக நம்பிக்கைத் தெரிவித்தார்.  மேலும் அவர் அக்குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், பள்ளிச்சீருடைகள் கொடுத்து உதவிக்கரம் நீட்டினார்.
பள்ளிக்குச் செல்லும் ரத்னாவின் பேரப்பிள்ளைகள் பள்ளி நேரத்திற்கு பிறகு இரும்பு பொருட்கள், பழைய பொருட்களை சேகரித்து விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் அளவான உணவு உட்கொண்டு வாழ்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);