9 வெள்ள நிவாரணத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் – சாவ்

மாநில அரசு நீர் பாசன மற்றும் வடிகால் துறையுடன் இணைந்து பினாங்கு மாநில முழுவதும் 9 வெள்ள நிவாரணத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்திட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகால வரையறையில் அமல்படுத்தப்படும் . மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த பட்ஜெட்டில் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ள ரிம150 லட்சம் பயன்படுத்தி இந்த 9 திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
தொடர்ந்து மாநில அரசு, வடிகால் துறையுடன் இணைந்து இத்திட்டங்கள் செயல்படுத்த முதல் கட்டமாக நிபுணர்கள் நியமனம், விரிவான வடிவமைப்பு, குத்தகை ஒப்பந்த ஆவணங்களை தயார் செய்தல், திறந்த குத்தகை முறை செயல்படுத்துதல், இறுதியாக நியமனம் செய்தல் இடம்பெறும். வெள்ள நிவாரணத் திட்டம் வருகின்ற 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்

நீர் பாசன மற்றும் வடிகால் துறை இயக்குநர் பொறியியலாளர் சப்ரி அப்துல் முலுக் மற்றும் துணை இயக்குநர் திரு ரத்ன ராஜாவும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுவரை பினாங்கில் வெள்ளம் அதிகமாக ஏற்படும் 45 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெருநிலப் பகுதியின் மத்திய செபராங் பிறையில் 6 இடங்கள் அதேவேளையில் வடக்கு செபராங் பிறையில் 1 இடம் மற்றும் தென்மேற்கு செபராங் பிறையில் 2 இடங்கள் அதிகமாக வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு வெள்ள நிவாரணத் திட்டம் மேற்கொள்வதன் மூலம் பல இடங்களிலிருந்து வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
மாநில அரசு வழங்கியுள்ள ரிம150 லட்சம் நிதி ஒதுக்கீடு பயன்படுத்தி சுங்கை பினாங்கு III வெள்ள நிவாரணத் திட்டம் மேற்கொள்ளப்படும் என பொறியியலாளர் சப்ரி தெரிவித்தார். வெள்ள நிவாரணத் திட்டங்கள் சீராக இயக்குவதற்கு இரண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதில் தொழில்நுட்ப குழுவிற்கு பொறியியலாளர் சாப்ரி மற்றும் வழிநடத்தும் குழுவிற்கு சாவ் கொன் யாவ் தலைமையேற்பர் .document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);