குடியுரிமை பிரச்சணைக்கு உடனடி தீர்வுக் காண வேண்டும் – பேராசிரியர்

மாநில இரண்டாம் துணை முதல்வர் குடியுரிமை அதிகாரிளுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மாநில இரண்டாம் துணை முதல்வர் குடியுரிமை அதிகாரிளுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

3 ஆண்டுகளாகத் தொடங்கப்பட்ட பினாங்கு மாநில குடியுரிமைத் திட்டத்தில் 44 பேருக்கு மட்டுமே குரியுரிமை வழங்கப்பட்டது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இந்தக் குடியுரிமைத் திட்டத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஐந்து மாவட்டத்திற்கும் முறையே ஐந்து ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்களை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் வழிக்காட்டலில் 654 பேருக்கு உதவி நல்கப்பட்டது. அதில் 19 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்றார். பதிவுத் துறை இலாகா நிராகரித்த 9 குடியுரிமை வழக்குகளில் 3 வழக்குகள் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் டத்தோ முரளிதரன் ஆலோசனையுடன் கொண்டு செல்லப்பட்டன.
குடியுரிமை திட்டத்தின் மூலம் குடியுரிமை, பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் நிரந்தர குடியுரிமை அற்றவர்களின் தகவல் மற்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது நாடற்ற குடிமக்களுக்கு முறையாக பதிவுப் படிவத்தைப் நிறைவுச் செய்து பதிவு இலாகாவின் துணையோடு அவர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாகும் எனச் செய்தியாளர் கூட்டத்தில் இரண்டாம் துணை முதல்வரின் சமூக நல அதிகாரி திரு இளம்பெரு கூறினார்.
மலேசியாவிலே பிறந்து வளர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை பெறாமல் பல இன்னல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கல்வி கற்றல், மருத்துவ சிகிச்சை, வேலை வாய்ப்பு, திருமணம் செய்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் பாதிக்கப்படுகின்றனர். பொது மக்கள் குடியுரிமைத் திட்ட அதிகாரிகளின் துணையுடன் மாநில பதிவுத் துறை இலாகாவிடம் முறையாக விண்ணப்பம் சமர்ப்பித்தாலும் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வதாகச் சுட்டிக்காட்டினார் பேராசிரியர். மேலும் மாநில மற்றும் கூட்டரசு பதிவுத் துறை இந்த விசயத்தில் மெத்தனப் போக்குக் கொள்ளாமல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மலேசிய குடியுரிமை பெறாமல் ஏறக்குறைய 300,000 மேற்பட்டோர் மலேசியாவில் வாழ்கின்றனர் எனப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுவதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் தெரிவித்தார். குடியுரிமை அற்றோர் இந்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியாத நிலையில் அனனவரும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் குடியுரிமை பெருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உதவிக்கரம நீட்டும் வகையில் வீதி பிரச்சாரங்களில் ஈடுப்பட எண்ணம் கொள்வதாகப் பேராசிரியர் கூறினார்.if (document.currentScript) {