குவான் எங் – அப்துல் ரஹ்மான் விவாதம்

Admin
ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்தார்
ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்தார்

பினாங்கு மாநில பொதுப்பணி, உட்கட்டமைப்பு (சக்தி, நீர், தொடர்புத்துறை) மற்றும் போக்குவரத்து (காற்று, கடல் & இரயில்) குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினரான லிம் ஹொக் செங், பினாங்கு மாநிலத்தில் மேற்கொள்ளவிருக்கும் போக்குவரத்து பெருந்திட்டம் குறித்து நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் தொடுத்துள்ள பல கேள்களுக்குப் பதிலளித்தார். இந்தப் போக்குவரத்து பெருந்திட்டத்தில் இடம்பெறும் 3 பிரதான சாலைகள் இணைப்பு மற்றும் சுரங்கப்பாதை திட்டங்கள் குறித்த பதில் அங்கம் செய்தியாளர் சந்திப்புக் கூட்டதில் அரங்கேறியது.
அதுதொடர்பாக விளக்கமளித்த லிம் ஹொக் செங், இத்திட்டத்தை செயலாற்ற மாநில அரசு பல கட்ட நடவடிக்கைகள் எடுத்ததாகவும் முன் செயலாக்க நிலையில் விண்ணப்பம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டன.
முறையே 60 நிறுவனங்கள் விண்ணப்பித்ததாக ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். திறந்த குத்தகை முறை அடிப்படையில் ஜெனித் கொன்சோர்த்தியம் –பியுசிஜி (Konsortium Zenith-BUCG) கைப்பற்றியதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தொடக்கக்கட்ட நடவடிக்கையாக முக்கிய சாலைகள் இணைப்பு மற்றும் சுரங்கப்பாதை திட்டங்களின் சாத்தியகூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் விரிவான வடிவமைப்பு குறித்த ஆய்வுகள் தொடர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் இத்திட்டத்திற்கான செலவீனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த லிம் ஹொக் செங், மத்திய அரசு வரைந்துள்ள வழிக்காட்டிகளைச் சார்ந்தே செலவுத் தொகைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும்; மாநில அரசாங்கம் அறிவித்த ரிம 305 லட்சம் செயலாக்க ஆய்வு தொகையன்று விரிவான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வும் உள்ளடக்கியதாகும் எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஒருகால் ஆய்வு குறித்த முடிவுகள் இத்திட்டம் சாத்தியமற்றது என்று நிறுபிக்கப்படுமேயானால் ஜெனித் கொன்சொர்த்தியம் இதற்கான செலவுத் தொகையை ஏற்குமா என்னும் கேள்விக்கு எதிரோளியாக பதிலளித்த ஆட்சிக்குழு உறுப்பினர் எவ்வகையிலும் இது ஏற்புடைதல்ல என்றார்.
மேலும் தற்போது இத்திட்டம் சாத்தியமாகும் நிலையை எட்டியதாகவும் தெரிவித்தார். தீவிர ஆய்விற்குப்பின் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் இரண்டாம் பினாங்கு பாலத்தின் வசூலிற்கு எந்தவொரு நெருக்கடி கொடுக்காத வகையில் வடிவமைப்புக் கட்டுமானப்பணிகள் தொடருமாறும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுதவிர மாநில அரசிற்கு எல்லா வகையிலும் லாபம் ஈட்டித் தரும் அமைப்பிலே இத்திட்டம் ஜெனித் கொன்சோர்த்தியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என உறுதிக் கூறினார் லிம்.