கூட்டரசு அரசாங்கம் விரைவாக விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் வழங் வேண்டும் – திரு ஜெக்டிப்

கூட்டரசு அரசிற்கு அனுப்பிய கடிதத்தைக் காண்பிக்கிறார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், டத்தோ ஜெரி சான் (இடமிருந்து வலம்)
கூட்டரசு அரசிற்கு அனுப்பிய கடிதத்தைக் காண்பிக்கிறார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், டத்தோ ஜெரி சான் (இடமிருந்து வலம்)

பினாங்கு மாநில மேம்பாட்டாளர்களுக்கு விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம்((Advertising Permit and Developers Licence – APDL) பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கு அரசியல் வேறுபாடு முக்கிய அம்சமாகத் திகழ்வதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூர் அரசு அமைச்சு அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் பினாங்கு மேம்பாட்டாளர்களுக்கு உரிமம் மற்றும் விளம்பர அனுமதி வழங்க வேண்டுமென்ற தாமதிப்பதாகச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர்.

APDL விண்ணப்பத்தைச் செயல்முறை படுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் மட்டுமே எடுக்கப்படும். ஆனால், இன்றைய நிலையில், 1 வருடத்திற்கு மேல் ஆகியும் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. கூட்டரசு அமைச்சின் நடவடிக்கை பினாங்கு தனியார் நிறுவன மேம்பாட்டாளர்களைப் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி பினாங்கு வாழ் பொது மக்களும் வீடு வாங்குவதை தடைச் செய்கின்றனர்.
கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ மற்றும் மலேசிய சொத்து நிர்மாணப்பு மற்றும் வீடமைப்பு சங்கத் தலைவர் டத்தோ ஜெரி சான் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 48 விண்ணப்பங்களில் 18 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப். கூட்டரசு அரசிடம் காரணம் வினவி கடிதம் அனுப்பியும் இது வரை பதில் கிடைக்கப்பெறவில்லை என்றார். இதனால், பினாங்கு மக்கள் மலிவு விலை வீடுகள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர் என்றார். கூட்டரசு அரசாங்கத்தின் கிராமம் மற்றும் நகர திட்ட துறை வழங்கிய வீடமைப்புத் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மாநில அரசிடம் வலுவான காரணங்கள் குறிப்பாக அத்திட்டங்களில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை அதுமட்டுமின்றி மாநில திட்டமிடல் குழு வரையறைத்த விதிமுறைகள் பின்பற்றவில்லை என எடுத்துரைத்தார் திரு ஜெக்டிப். ஆனால், கூட்டரசு அரசாங்கம் மாநில அரசின் விண்ணப்பங்கள் நிராகரிப்படுவதற்கு என்ன காரணம்? என வினவினார்.
விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம்((Advertising Permit and Developers Licence – APDL) வழங்குவதில் கூட்டரசு அரசின் நடவடிக்கை முரண்பாடானது எனச் சாடினார் டத்தோ ஜெரி சான்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);