கூழ்மப்பிரிப்பு சிகிச்சைக்கு நிதியுதவி- முதல்வர்

Admin
அட் தஃவா மசூதி இரத்த ஊடு பிரித்தலைக் மைய பிரதிநிதிகள்,  'MAA Medicare' நிறுவன பிரதிநிதிகள் உடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.
அட் தஃவா மசூதி இரத்த ஊடு பிரித்தலைக் மைய பிரதிநிதிகள்,
‘MAA Medicare’ நிறுவன பிரதிநிதிகள் உடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.

பினாங்கு மாநில அரசு மக்கள் சமூகநலத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றது என்பதனை சித்தரிக்கும் வகையில் கூழ்மப்பிரிப்பு சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் உடன்படுக்கை ஒன்றை மாநில அரசு ‘MAA Medicare’ நிறுவனம் மற்றும் அட் தஃவா மசூதி இரத்த ஊடு பிரித்தலை மையத்துடனும் (pusat haemodialisis masjid at-taqwa) பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கையெழுத்திட்டார். இத்திட்டம் அவ்விரு நிறுவனங்களுடன் மூன்று ஆண்டு கால தவணை (2016-2018) எனும் ஒப்பந்தத்தில் ரிம 1.8 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர்.
வட செபராங் பிறை மற்றும் மத்திய செபராங் பிறையில் வாழும் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அவ்வட்டாரத்தில் உள்ள இவ்விரு நிறுவனத்தை மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளன. கூழ்மப்பிரிப்பு சிகிச்சைக்கு ஒவ்வொரு நோயாளியும் தத்தம் ரிம95 – ரிம157 வரை தினசரி செலவிடுகின்றனர். இந்நிலையில் மாநில அரசு வழங்கியுள்ள நிதியுதவியின் வழி ஒவ்வொரு நோயாளியும் ரிம30 மட்டுமே கட்டணமாக செலுத்துவர். இத்திட்டத்தின் வழி வசதி குறைந்த நோயாளிகளின் பணச்சுமை குறையும் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

இதனிடையே, அட் தஃவா மசூதி இரத்த ஊடு பிரித்தலை மையத்தில்
கூடுதலாக ஐந்து கூழ்மப்பிரிப்பு இயந்திரங்களும், கூழ்மப்பிரிப்பு மையங்கள் பயனுடைமைகள் செலவு மற்றும் நோயாளி போக்குவரத்து என அனைத்திற்கும் மாநில அரசு ரிம 222,500 உதவி வழங்கியுள்ளது. இம்மையத்தில் அனைத்து இன மக்களும் எவ்வித பாகுபாடின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதன்வழி, ஒரு மாதத்திற்கு சராசரி 44 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைவர். இதனிடையே, 2014-ஆம் ஆண்டு பாலேக் புலாவில் திறக்கப்பட்ட கூழ்மப்பிரிப்பு சிகிச்சை மையத்தை மேம்படுத்த மாநில அரசு ரிம 1 கோடி ஒதுக்கியுள்ளது.
பினாங்கு மாநிலத்தை பசுமை, தூய்மை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான மாநிலமாக பிரகடனப்படுத்த மாநில அரசு பொதுமக்களின் நலனை பேணவும் இம்மாதிரியான திட்டங்களை அமல்படுத்துவது பாராட்டக்குரியதாகும்.