தேசிய பதிவு இலாகா சட்டத்தை தளத்த வேண்டும்- பேராசிரியர்.

மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுடன் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பிரமுகர்கள்
மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுடன் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பிரமுகர்கள்

இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் நோக்கத்தில் பினாங்கு மாநில அரசின் கீழ் இயங்கும் குடியுரிமை சிறப்பு குழுவின் முயற்சியால் அண்மையில் டி பிந்தாங் மண்டபத்தில் குடியுரிமை திட்ட மக்கள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காண 654 விண்ணப்பங்கள் தேசிய பதிவு இலாகாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் 44 விண்ணப்பங்கள் மட்டுமே வெற்றி கண்டிருப்பது வருத்தமளிப்பதாக தமதுரையில் குறிப்பிட்டார்.

அதோடு, தேசிய பதிவு இலாகாவினர் சட்டத்தை தளர்த்து விடுவதன் வழி இம்மாதிரியான பிரச்சனைக்குத் தீர்வுக் கிடைக்கும். ஏனெனில், அதிகமான முதியோர்கள் மலாய் மொழியில் புலமை பெற்றிருக்கவில்லை என்பதனை காரணமாக காட்டி அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிப்பாதாக மேலும் விவரித்தார். இந்நிலைமை நீடித்தால் சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அதிலும், கல்வி பயிலும் சில மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே படிப்புக்கு முடிப்புப் போடுவதும் வேலை கிடைக்காமல் திண்டாடும் நிலை நம் நாட்டில் இன்னமும் நடக்கிறது. இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காண வழக்கறிஞரின் உதவியை நாடுகிறது பினாங்கு குடியுரிமை சிறப்புக்குழு என குறிப்பிட்டார் பேராசிரியர்.

குடியுரிமை பிரச்சனைக்கு தீர்வுக்காண திரண்ட மக்கள்.
குடியுரிமை பிரச்சனைக்கு தீர்வுக்காண திரண்ட மக்கள்.

மேலும், இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு, சமூகநல உதவி, குடிநுழைவுத் துறை தொடர்பான அலுவல்கள், அனைத்து தங்கத் திட்டத்திலும் பதிவுச் செய்தல், பினாங்கு வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிகாட்டல் போன்ற சேவைகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இத்திட்டம் பினாங்கு மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் பேராசிரியர்.