கொடிமலை தன்னார்வ படையினரின் முயற்சியில் புதிய தீயணைப்பு இயந்திரங்கள்.

புதிய தீயணைப்பு இயந்திரத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்.
புதிய தீயணைப்பு இயந்திரத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்.

கொடிமலை தன்னார்வ தீயணைப்புப் படையினரின் முயற்சியில் புதிய தீயணைப்பு வண்டிகள் பொதுப்பணிக்குப் பயன்படுத்துவதாக அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்தப் புதிய தீயணைப்பு இயந்திரம் 14,800 லீட்டர் நீரை நிரப்ப முடியும்; இது சுமார் அரைமணி நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பினாங்கு மாநிலத்தில் மட்டுமே தன்னார்வ தீயணைப்புப் படையினரின் முயற்சியில் தீயணைப்பு இயந்திரங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர்.
கொடிமலை தன்னார்வ தீயணைப்புப் படையினரிடம் நான்கு தீயணைப்பு வண்டிகள், இரண்டு அம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு அவசர படகுகள் பினாங்கு வாழ் மக்களின் ஆபத்து அவசர வேளையில் உபயோகிக்கும் வகையில் பயன்படுத்தப்படும். இப்புதிய இரண்டு தீயணைப்பு வண்டி வாங்குவதற்காக ரிம160,000 செலவிடப்பட்டுள்ளது. இதில் ரிம55,000 பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் சொந்த மானியத்திலிருந்தும் மற்றொரு பங்கினை ஐடியல் சொத்துடமை நிறுவனம் வழங்கியுள்ளது பாராட்டக்குறியதாகும்.

தன்னார்வ தீயணைப்புப் படையினரின் அம்புலன்ஸ்கள்
தன்னார்வ தீயணைப்புப் படையினரின் அம்புலன்ஸ்கள்

2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ தீயணைப்புப் படையினர் சாலை விபத்து மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் சிறந்த சேவையை அவ்வப்போது ஆயிர் ஈத்தாம், ஆயிர் புத்தே, ஃபர்லிம் மற்றும் பாயா தெருபோங் வட்டாரங்களில் இருந்து பினாங்கு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் சேவையும் வழங்கி வருகின்றனர். அவ்வட்டார மக்கள் அவசர வேளைகளில் 24 மணி நேரம் சேவையில் இருக்கும் 012-4032994 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.} else {