கொடுமையைத் தகர்க்க வழிவகுப்போம்

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொடுமை அல்லது மிரட்டல் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இரண்டு கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.. இந்த கருத்தரங்கு மாநில இளைஞர் & விளையாட்டு, மகளிர், குடும்பம் & சமூக மேம்பாடு ஆட்சிக்குழுவும் “Heart and Child Rising” எனும் அரசு சாரா இயக்கமும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ளனர்.

மார்ச் மாதம் 17-ஆம் திகதி நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் உளவியல்(psychology) முறையில் கலந்தாய்வு மேற்கொண்டு தன்னைப் பற்றி அறிந்து கொண்டு பிறருக்கும் உதவ துணைபுரியும். மறுநாள் அதாவது 18/3/2015-ஆம் நாள் “கொடுமை- நிறுத்து, தகர்த்திடு” எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும் . இந்தக் கருத்தரங்கில் ஆர்வமுள்ள அனைவரும் குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.
சிங்கப்பூர் நாட்டைச் சார்ந்த மருத்துவ உளவியலாளரும் மருத்துவருமான டாக்டர் பிரேட் தோக் இந்த இரண்டு நாட்களுக்கான கருத்தரங்கை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த இரண்டு நாட்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் ரிம50-ஐ பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நுழைவுக்கட்டணம் பெற்றுக்கொள்ள விரும்புவோர் பிசில்லா என்பவரை [email protected] எனும் மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்..
நமது நாட்டில் கொடுமை சம்பந்தமான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அதைத் தகர்க்கும் பொருட்டு இந்த கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங்.

கருத்தரங்கு பிரச்சூரத்தைக் காண்பிக்கிறார் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்
கருத்தரங்கு பிரச்சூரத்தைக் காண்பிக்கிறார் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்