சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

புதிய தலைகவசம் அணிந்த பள்ளி மாணவர்கள்
புதிய தலைகவசம் அணிந்த பள்ளி மாணவர்கள்

வாகனமோட்டிகளில் குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அண்மையில் ஶ்ரீ தங்சோங் பினாங்கு தெஸ்கோ பேரங்காடியில் “தலைகவசம் அணிவோம்” என்ற பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே இ சீயூ. தெஸ்கோ பேரங்காடியும் இ&ஒ தங்கும்விடுதியும் இணைந்து பள்ளிக்கூட மாணவர்களுக்கென பிரத்தியேகமாக தலைகவசம் அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே மிக அதிகமான சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
பெருநாள் காலங்களில் அதிகமான வாகனமோட்டிகள் சாலையைப் பயன்படுத்துவர். எனவே வாகனமோட்டிகள் சாலை விதிமுறைப் பின்பற்றுவதோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாலையில் பயணிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக மழைக் காலங்களிலும் இரவு நேரத்திலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என மேலும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஹன் பின் சீனப்பள்ளியை இணைக்கும் ஜாலான் காச்சா பிரிங் சாலையுடன் ஜாலான் பூங்கா இனாய் சாலை பகுதியில் புதிய சாலை கூடிய விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன்வழி, அவ்வட்டாரத்தில் ஏற்படும் சாலை நெரிசலுக்குத் தீர்வுக்காண இயலும் என மேலும் தெளிவுப்படுத்தினார். அதோடு, தங்சோங் பூங்கா வட்டாரத்தில் ஏற்படும் சாலை நெரிசலுக்கும் விபத்துக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களே காரணம் எனச் சாடினார். இப்பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வுக்காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள் அவசியமாக தலைகவசம் மற்றும் பாதுகாப்பு கவச ஆடையை அணிய வேண்டும். ஏனென்றால், காலை மற்றும் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இவர்களை அடையாங்காண்பதற்கு இலகுவாக இருக்கும்.if (document.currentScript) {