சிறந்த தேர்ச்சிப் பெற்ற பினாங்கு மாநில இந்திய மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது

ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருக்கோவில் ஏற்பாட்டில் அரசாங்க தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழா கடந்த 21-7-2013 திகதி ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருக்கோவில் அரங்கில் நடைபெற்றது. இவ்விழா 8-வது முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விழாவில் அரசாங்க முக்கிய தேர்வுகளான யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் ஆகியவற்றில் சிறந்த அடைவுநிலை பெற்ற பினாங்கு இந்திய மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் 105 இந்திய மாணவர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் பணம் சன்மானமாக வழங்கப்பட்டன.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திரு ஜெயபாலன் அவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவருக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திரு ஜெயபாலன் அவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவருக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திரு ஜெயபாலன் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார். இந்தியர்களின் வெற்றிக்கு வித்திடும் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என மதிப்பிற்குறிய டாக்டர் திரு ஜெயபாலன் அவர்கள் கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு மாணவனின் வெற்றியை அங்கீகரிக்கும் பொழுது அம்மாணவன் வாழ்வில் சிறந்து விளங்குவான் என்பது திண்ணம் என்றார்.

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்
பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்