சுங்கை பினாங் – நகரம் வரை புதிய மிதிவண்டி பாதை திறக்கப்பட்டது.

 

 புதிய பிதிவண்டி பாதை.
புதிய பிதிவண்டி பாதை.

 

பினாங்கு மக்கள் கூட்டணி, பினாங்கு நகராண்மைக் கழகம் மற்றும் பி.எச்.ல் வடெர்பிராவ்ன் சென்.பெர் இணைந்து ஜாலான் சுங்கையிலிருந்து ஜார்ஜ்டவுன் நகரம் (காமா பேரங்காடி வரை) புதிய மிதிவண்டி பாதையை நிர்மாணித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கடந்த 29 நவம்பர் 2014-ஆம் நாள் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் திறக்கப்பட்டது.

படம் 1: மிதிவண்டி பாதை திறப்புவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்.
படம் 1: மிதிவண்டி பாதை திறப்புவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

 

 

 

 

நிகழ்வில் சிறப்புரையாற்றிய பினாங்கு மாநில முதல்வர் அவர்கள் இப்புதிய மிதிவண்டி பாதை ரிம4.7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டது என்றார். ஜாலான் சுங்கையிலிருந்து ஜார்ஜ்டவுன் நகரம் (காமா பேரங்காடி வரை) 1.55 மீட்டர் தூரம் துவக்கப்பட்டுள்ளது. இதில் 450 மீட்டர் பாதை பி.எச்.ல் வடெர்பிராவ்ன் சென்.பெர் நிறுவனமும் 1.1 மீட்டர் பாதையை பினாங்கு நகராண்மைக் கழகமும் வழங்கிய நிதியில் நிறுவப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மாநில முதல்வர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பினாங்கு மாநில முதிவண்டி பாதை நிர்மாணித்தன் காரணம் ஆரோக்கியமான சமுதாயத்தை உறுவாக்கவே என்று சூளுரைத்தார்.

புதிய மிதிவண்டி பாதைகள்:

I. பத்து மாவுங் கிழக்குக்கரையிலிருந்து குயின்ஸ்பே பேரங்காடி வரை மற்றும் பந்தாய் ஜெரெஜா-லிருந்து சுங்கை பினாங் வரை நிர்மாணிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
II. ஜார்ஜ்டவுன் நகரம் மற்றும் பினாங்கு பாரம்பரிய வலயம்.
III. தெலோக் பாஹாங்-லிருந்து பாயான் லெபாஸ் வரை.
IV. பாலேக் புலாவ் பகுதியில் கிராம சூழல், விவசாயம் மற்றும் கடலோர காட்சிகளுடன் 20 மீட்டருக்கு நிறுவப்பட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தை அனைத்துலக ரீதியில் பிரசித்தி பெற செய்யும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இதில் பொதுமக்களும் தங்களின் ஒத்துழைப்பை வழங்கி பயன் பெற வேண்டும் என தமதுரையில் மேலும் கூறினார் மாநில முதல்வர் அவர்கள். அத்தினத்தன்று நடத்தப்பட்ட நட்பு மிதிவண்டி ஓட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாகக் கலந்து கொண்டனர்.