சுதந்திர தினப் போட்டி விளையாட்டு 2015

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன் வரவேற்புரையாற்றினார்
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன் வரவேற்புரையாற்றினார்

தாமான் பிராவுன் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழக ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போட்டி விளையாட்டு இனிதே நடைபெற்றது. இவ்விழா தாமான் பிராவுன்குடியிருப்புப் பகுதி பொதுத் திடலில் இடம்பெற்றது. இவ்விழாவில் சிறப்பி பிரமுகராக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன் கலந்து கொண்டார். அதுமட்டுன்றி இப்போட்டி சிறப்பாக நடைபெற நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் இன பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வரவேற்புரையில் தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயபாலன். இந்நிகழ்வில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் பற்றும் பல இன மக்கள் ஒரு குடைக்குள் கீழ் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல போட்டிகள் குறிப்பாக போத்தலில்தண்ணீர் நிரப்புதல், பலூன் வீசுதல், ஆப்பிள் பழம் சாப்பிடுதல் மற்றும் பல போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து வெற்றிப் பெற்ற பிள்ளைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பரிசு எடுத்து வழங்கினார்.

போட்டி விளையாட்டில் கலந்து கொண்ட சிறுவர்கள்
போட்டி விளையாட்டில் கலந்து கொண்ட சிறுவர்கள்

இந்நிகழ்வில் வருகையளித்த அனைவருக்கும் உள்நாட்டு பழங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.