டிங்கி கொசு ஒழிப்புப் பிரச்சாரம்

டிங்கி கொசு ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுப்பட்டார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயபாலன்
டிங்கி கொசு ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுப்பட்டார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயபாலன்

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபீப் பஹாருடின் மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன் இருவரும் இணைந்து வீட்டுக்கு வீடு டிங்கி கொசு பரவுதலை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தில் களம் இறங்கினர்.
டேசா பிஸ்தாரி குடியிருப்பாளர்கள் வீடுகளை திறந்து வைக்குமாறு
வடகிழக்கு மாவட்ட சுகாதார துறை பரிந்துரைத்து அங்குள்ள வீடுகளுக்கு மருந்து தெளிக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்துள்ள போதிலும் பொதுமக்களிடையே இவ்விழிப்புணர்வு தொடர்ந்தாற்போல இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இப்பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டதாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன் தெரிவித்தார். தற்போது டிங்கி காய்ச்சல் சம்பவங்களில் டேசா பிஸ்தாரியில் ஏழு பேர், ஜாலான் சல்வீன் இரண்டு பேர், பந்தாய் ஜெர்ஜாக் ஐந்து பேர் என 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, குப்பைகளை பொறுப்பின்றி வீசும் மேம்பாட்டாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது என ஆட்சிக்குழு உறுப்பினர் அபீப் பஹாருடின் கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்களுக்கு இரண்டு வாரம் மட்டுமே சுற்றுப்புறத்தை துப்புரவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைச் செய்ய தவறும் பொறுப்பற்ற மேம்பாட்டாளர் மீது அதிரடி நடவடிக்கையாக பணி நிறுத்தம் செய்யப்படும் என எச்சரித்தார்.if (document.currentScript) {