“பினாங்கு மக்களுக்காக தொடந்து போராடுவோம்” – முதல்வர்

மாநில அரசு தலைவர்கள் மற்றும் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்கிற்கு தமது நல் ஆதரவை வழங்கினர்.
மாநில அரசு தலைவர்கள் மற்றும் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்கிற்கு தமது நல் ஆதரவை வழங்கினர்.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மீது தொடுக்கப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு அடுத்த டிசம்பர் மாதம் 6-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அமர்வுகளுக்கு தமது வழக்கறிஞர் கவனித்துக் கொள்வார் என மேலும் தெரிவித்தார். பொது மக்கள் முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றஞ்சாட்டுகள் மீது கவனம் செலுத்தும் வேளையில் பொருள் சேவை வரி அமலாக்கத்தினால் வணிகத் துறை பெரும் பாதிப்பு அடைந்துள்ளது என விழிப்புணர்வு கொள்ள வேண்டும். “நாம் தூய்மையானவர்கள் மற்றும் தூய்மையான நிர்வாகம் புரிவதை நிரூபிக்கும் பொறுப்பினை எனது வழக்கறிஞரிடம் வழங்கியுள்ளேன், மக்களின் கவனத்தை திசை திருப்பாமல், நாங்கள் (மாநில அரசு) தொடந்து மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்போம்” என வழக்கு பதிவு அமர்வுக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் மாநில முதல்வர் லிம் குவான் எங்.
மாநில அரசு தலைவர்கள் மற்றும் நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர். பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு வருகையளித்து வற்றாத ஆதரவு வழங்கிய பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றி நவில்ந்தார். மலேசியர்கள் மற்றும் பினாங்கு மக்களுக்காக தொடந்து போராடுவோம் என பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான குவான் எங் கூறினார். மாநில முதல்வரின் பிரதிநிதியாக ஆஜராகும் வழக்கறிஞர் திரு கோபிந் சிங் இந்த வழக்கு ஒத்தி வைப்பதற்குக் காரணம் இவ்வழக்கு தொடர்பில் 13,000 பக்கம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது என்றார்.