‘தி டோப்’ சுற்றுப்பயணத்திற்கு சிறந்த தளம் – முதல்வர்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ், கெலாங் பாத்தா நாடளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் மற்றும் பிரமுகர்கள் ‘தி டாப்பில்’ அமைக்கப்பட்டுள்ள ‘rainbow skywalk’ (வானவில் நடைப்பாதை) சென்றனர்.

துன் அப்துல் இரசாக் கட்டிடம் ‘தி டாப்’ அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்குப் பின் மீண்டும் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கிறது. 60 மாடிக்கும் மேல் கொண்ட இக்கட்டிடம் பினாங்கு மக்களுக்கு மைல்கல்லாக அமைகிறது. ‘ தி டாப்பில்’ அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்க கேளிக்கை மையம் பினாங்கு மாநிலத்தின் மிகப் பெரிய மையமாகத் திகழ்வதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவரும் எனக் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
2008-ஆம் ஆண்டு தொடங்கி கொம்தார் கட்டிடத்தில் பணிப்புரிந்ததில் இன்று வரலாற்று மிக்க நாளாக கருதி பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.
“கொம்தார் கட்டிடம் பழமையாக காட்சியளித்து பலரின் எண்ணங்களிலிருந்து நீங்கியது, ஆனால் இக்கட்டிடத்திற்கு மீண்டும் புத்துயிர் வழங்கி புதுப்பொழிவுடன் மிளிரச் செய்தோம்’ என ‘தி டாப்’ திறப்புவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் தெரிவித்தார்.
மலேசிய துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி பிரதிநிதியாக சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். பினாங்கு மாநில “தி டாப்’ அனைத்துலக அரங்கில் சிறப்பிடம் பெறுவதாடு மலேசியாவின் மைல்கல்லாகத் திகழும் என்றார் அமைச்சர் முகமது நஸ்ரி.
‘தி டாப்’ பிரதிநிதித்து Only World Group தலைவர், டத்தோ டாக்டர் துங்கு ரெட்வான் துங்கு மன்சோர் உரையாற்றுகையில் ‘தி டாப்’ திறப்புவிழா தனியார் நிறுவனம், கூட்டரசு மற்றும் மாநில அரசு ஒருங்கிணைப்பைப் பிரதிப்பலிக்கிறது என்றார். கூட்டரசு மற்றும் மாநில அரசு கொம்தார் கட்டிடத்தின் சுற்றுலாத்துறையை மேன்மையடையச் செய்கிறது. ‘ தி டாப் ‘ அரங்கத்திலிருந்து பினாங்கு மாநில கட்டிடங்கள், கடல், பொழுதுபோக்கு மையங்கள், மலை குன்று அனைத்தும் 360 டிகிரி 249 மீட்டர் உயரத்தில் காண முடியும். “மீண்டும் தி டாப் சரித்திரம் படைக்கிறது” என்றார் துங்கு ரெத்வான்.
ஜுராசிக் ஆராய்ச்சி மையம், 7D டிஸ்கவரி மோஷன் தியேட்டர், தெக் டோம், ‘மேஜிக் கண்ணாடி பிரமை’, இசைக்கருவிகள் கொணர்வி, டிராகன் படகு என 28 பிரிவுகள் உள்ளடக்கிய “தி டாப்” உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு சிறந்த தலமாக விளங்கும்.