முதல் முறையாக பேருந்து ஓட்டுனர்களுக்குச் சன்மானம்

திருமதி பவானி

பினாங்கு மாநில பேருந்து ஓட்டனர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு 2016-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. முதல் முறையாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ள 1,270 பேருந்து ஓட்டினர்கள் வருகை புரிந்தனர். கடந்த 5-ஆம் திகதி டிசம்பர் மாதம் பினாங்கு தீவுப்பகுதியில் 354 பேருந்து ஓட்டுனர்களும், 4-ஆம் திகதி 416 பதிவுப்பெற்ற ஓட்டுனர்களும் பெருநிலப்பகுதியில் பெற்றுக் கொண்டனர்.
2016-ஆம் ஆண்டு தொடங்கி மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரிம462,000.00-ஐ நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது எனத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இவ்வாண்டு அனைத்து ஓட்டுனர்களும் இரண்டு தவணைக்கான ஊக்கத்தொகை ரிம600-ஐ பெற்றுக்கொண்டனர். அடுத்தாண்டு தொடங்கி இச்சன்மானம் இரண்டு தவணையாக வழங்கப்படும். அதிகமான பேருந்து வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு இரண்டு பெர்மிட்களுக்கு மட்டுமே சன்மானம் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

பினாங்கு பேருந்து ஓட்டுனர் சங்கம், மாநில அரசாங்கம் மற்றும் ஒட்டுனர்களுடன் உறவை வலுப்படுத்த சிறந்த கருவியாக அமைகிறது. இச்சங்கத்தின் துணையுடன் பினாங்கு பேருந்து ஓட்டுனர்கள் சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். பினாங்கு மாநிலத்தின் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு பாதுகாப்பாக செல்வதை மேம்படுத்த சிறந்த ஊடகமாகத் திகழ்வது பேருந்து ஓட்டுனர்களே எனப் புகழாறம் சூட்டினார்.

மலேசியாவில் இருக்கும் 14 மாநிலங்களில் பினாங்கு மாநில அரசாங்கம் மட்டுமே பேருந்து ஓட்டுனர்களுக்குச் சன்மானமாக தலா ரிம600 வழங்கிறது எனத் தெரிவித்தார் பேருந்து ஓட்டுனர் திருமதி பவானி. பெண்களும் இத்துறையில் ஈடுப்பட ஆர்வம் கொள்ள வேண்டும் என்றார். 15 ஆண்டுகளாக பேருந்து ஓட்டும் திருமதி பவானி பேருந்து ஓட்டுனர்களின் வருமானம் ஏற்றம் இறக்கமாக இருக்கும் பட்சத்தில் மாநில அரசின் ஊக்கத்தொகை வாகன பராமரிப்புக்கு ஊன்றுகோளாகத் திகழும் எனக் கூறினார். மேலும், இப்பணி சுயத் தொழிலாகவும் நிறைந்த வருமானம் பெறும் தொழிலாகவும் திகழ்கிறது என்றார்.