தைப்பூச விழாவில் முறையான வழியில் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும்

”தர்மவேல்” எனும் பட்டறையில் பட்டறையில் கலந்து கொண்ட
மலேசிய இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள்

தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.

இந்தப் புனித தினத்தில் இந்துக்கள் முறையான பால்குடம் மற்றும் காவடி நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டு மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு மாநில கிளை ஏற்பாட்டில் தர்மவேல்எனும் பட்டறை நடத்தப்பட்டது. இந்நிகழ்வு பினாங்கு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 22/12/2017-ஆம் நாள் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினரான மலேசிய தலைமை குருக்கள் மற்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஆலோசகருமான அ.. முத்துக்குமார சிவாச்சாரியார் வருகை மேற்கொண்டு தைப்பூசமும் முறையான பால்குடம் & நேர்த்திக்கடனும்எனும் தலைப்பில் பேருரை வழங்கினார். “தைப்பூசத்தில் பக்தி காவடிகளே எடுக்க வேண்டும். சில ஆண்டுகளாக குறிப்பாக மலேசியாவில் ஆடம்பர காவடிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே, பண்டைய காலத்தைப் போல் இந்துக்கள் முறையான வழியில் காவடியைச் செலுத்த வேண்டும்என அ.. முத்துக்குமார சிவாச்சாரியார் தெரிவித்தார்.

முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காய்களும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்களே உடைப்பது முறையன்றும் பிறர் வந்து உடைப்பது முறையல்ல என மேலும் தெரிவித்தார்.

மலேசிய இந்து தர்ம மாமன்ற பினாங்கு மாநில கிளைத் தலைவர் திரு.வெ.நந்தகுமார் பேருரை வழங்கிய குருக்கள் அ.ப. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்களுக்கு சிறப்பு செய்தார்.

தைப்பூசத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பொதுவாகவே இடும்பன் பூசை செய்வது வழக்கமான செயலாகும். இன்றைய காலத்தில் அத்தினத்தன்று இடும்பனுக்கு சுருட்டு, சாராயம், பீர், மாமிசம் போன்றவை வைப்பது தவறான நடவடிக்கையாக கருதப்படுப்படுகிறது. இந்து ஆகம முறைப்படி அப்பூசையில் சைவ உணவு தயாரித்து படையல் போட்டு மற்றவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இடும்பன் சைவம் சார்ந்த கடவுளாவர்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியச் செயலாளர் திரு ரிஷி குமார், மலேசிய இந்து தர்ம மாமன்ற பினாங்கு மாநில கிளைத் தலைவர் திரு.வெ.நந்தகுமார் கலந்து கொண்டனர்.

தைப்பூசம் சமயம் சார்ந்த விழாவாகும், ஆனால் அத்தினத்தன்று சில தரப்பினர்களால் தகாத நடவடிக்கைகளில் ஈடுப்படுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுதல், நள்ளிரவில் நேர்த்திக்கடன் செலுத்துதல், மதுபானம் அருந்துதல், குண்டர் கும்பல் சண்டை ஆகிய நடவடிக்கைகள் இதனைச் சித்தரிக்கின்றன.

எனவே, இந்துக்கள் அனைவரும் இந்து ஆகம முறைப்படி தைப்பூசத் தினத்தன்று நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமான் ஆசிப்பெருவோம்.