மாநில அரசு வீடமைப்புப் பராமரிப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது

கொடிமலை நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜோஹாரி

பினாங்கு மாநில அரசு பாடாங் தேம்பா அடுக்குமாடி பகுதியில் 12 வீடமைப்புப் பராமரிப்புத் திட்டம் மேற்கொள்வதற்கு ரிம1.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ கூறினர். இதுவரை மாநில அரசு வழங்கிய நிதி ஒதுக்கீட்டில் பாடாங் தெம்பா பொது அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு அதிகமான நிதியுதவி அதாவது 25% (ரிம29.684.044.55) கொடுத்ததாகக் கூறினார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் மாநில அரசு இந்த 9 பிளாக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி பராமரிப்புத் திட்டத்திற்காக ரிம29 லட்சம் செலவிடப்பட்டது. மின்தூக்கி பழுதுப்பார்த்தல், கழிவுநீர் குழாய் சரிப்பார்த்தல், மின்சாரம் மற்றும் இதர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இந்நிதியுதவி பயன்படுத்தப்பட்டது.

எனினும் அடுத்த ஆண்டும், மாநில அரசு இந்த வீடமைப்புப் பகுதியில் மேலும் 12 பராமரிப்புத் திட்டங்கள் மேற்கொள்ள ரிம1.2லட்சம் நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது. இந்நிதி பயன்படுத்தி குப்பை தொட்டிகள் மேம்படுத்துதல், குழாய்நீர் பழுதுப்பார்த்தல், மின்தூக்கி பழுதுப்பார்த்தல், கூரை சரிப்பார்த்தல் ஆகிய பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

“நான் பினாங்கை நேசிக்கிறேன்” எனும் சின்னத்தை பாடாங் தெம்பா அடுக்குமாடி குடியிருப்பில் வரையப்பட்டது.

இந்நிகழ்விற்கு கொடிமலை நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜோஹாரி, வீடமைப்புத்துறை துணை செயலாளர் அக்மால் அபு பாசார் கலந்து கொண்டனர்.

திரு ஜெக்டிப் கூறுகையில் ஒன்பது பிளாக் கொண்ட இந்த வீடமைப்புப் பகுதியில், எழு பிளாக் வீடுகள் வாடகைகொள்முதல் அடிப்படையில் விற்கப்பட்டன. மீதமுள்ள இரண்டு பிளாக் (ஈ மற்றும் ஜே) மட்டுமே பினாங்கு மாநில அரசு வாடகை திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றன. எனினும், மாநில அரசு அனைத்து ஒன்பது பிளாக் பராமரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கிறது என்றார்.

மாநில அரசு அனைத்து பொது வீடமைப்புப் பகுதிகளையும் பராமரித்து பொது மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.

அடுத்த ஆண்டும் தொடர்ந்து “நான் பினாங்கை நேசிக்கிறேன்எனும் சின்னத்தை அனைத்து அரசு பொது வீடமைப்புகள் மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இடம்பெறும் வீடமைப்புப் பகுதிகளிலும் வரையப்படும்.