பசுமை விருதளிப்பு விழா 2015

பசுமை விருதளிப்பு வெற்றியாளர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களுடன் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.
பசுமை விருதளிப்பு வெற்றியாளர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களுடன் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.

பினாங்கு பசுமை கழகத்தின் ஏற்பாட்டில் பசுமை விருதளிப்பு விழா செபராங் பிறை ஸ்பைஸ் அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களுடன் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் கலந்து சிறப்பித்தனர். பினாங்கு மாநில அரசு சுற்றுச்சூழல் பசுமைக்கு முக்கியதுவம் கொடுக்கும் நோக்கத்தில் இப்போட்டியை நடத்தியது. இம்முறை பினாங்கு பசுமை பள்ளி விருது, பினாங்கு பசுமை அலுவலக சான்றிதழ், பினாங்கு பசுமை ஊடகவியல் விருது, பினாங்கு பசுமை ஒளிநாடா போட்டிகளுடன் புதிதாக இரண்டு பினாங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேணுதல் விருது மற்றும் பினாங்கு சூழல் பேண்தகைமைச் விருது ஆகியவைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் அடுத்தாண்டில் 26 அலுவலகங்கள் பசுமை அடிப்படையில்

பினாங்கு பசுமை ஊடகவியல் விருது பெற்ற வெற்றியாளர்கள்
பினாங்கு பசுமை ஊடகவியல் விருது பெற்ற வெற்றியாளர்கள்

உருமாற்றப்படவுள்ளன என அறிவித்தார். 2018-ஆம் ஆண்டுக்குள் பினாங்கில் உள்ள அனைத்து அலுவலகங்களும் பசுமை அடிப்படையில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக மேலும் விவரித்தார். பினாங்கு மாநிலம் தேசிய ரீதியில் ஒப்பிடுகையில் 32% மறுசுழற்சி விகிதம் அதிகமாக உள்ளது. 2020-இல் மறுசுழற்சி விகிதத்தை 42% அதிகரிக்க மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாகக் கூறினார். மேலும், பினாங்கு மாநிலத்தை சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மிகுந்ததாக மாற்றியமைக்க அனைத்து தரப்பினரும் தமது பங்கினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.if (document.currentScript) {