விண்ணப்பதாரர் மற்றும் கடன் நிராகரிப்பு விகிதம் இடையே இடைவெளியைக் குறைக்க பட்டறை நடத்தப்படும் – திரு.ஜெக்டிப்

 கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ
கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ

கடந்த 2 நவம்பர் 2015-ஆம் நாள் தேசிய வங்கி ஆளுநரின் உதவி அதிகாரியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் பிரதிபலனாக பினாங்கு மாநிலத்தில் வீடமைப்பு விண்ணப்பதாரர் மற்றும் கடன் நிராகரிப்பு விகிதம் இடையே இடைவெளியைக் குறைக்க தொடர்ச்சியாகப் பல பட்டறை நடத்தப்படும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ.
மேலும், இச்சந்திப்பின் போது பொது வங்கிகள் விண்ணப்பதாரார்களுக்கு வீட்டுக் கடனுதவி வழங்க விதிக்கப்படும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்வழி, வங்கிகளில் வீட்டுக் கடனுதவி நிராகரிப்பு குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் திரு.ஜெக்டிப். அதாவது, மனை வாங்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கணவன் மனைவி இருவரின் ஒட்டுமொத்த வருமானத்தையும் விண்ணப்பப் பாரத்தில் பூர்த்திசெய்ய வேண்டும். இதன்வழி, வீட்டுக் கடனுதவி கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக மேலும் அவர் தெளிவுப்படுத்தினார்.

ஆகவே, விண்ணப்பதாரர் மற்றும் கடன் நிராகரிப்பு விகிதம் இடையே இடைவெளியைக் குறைக்க பட்டறை விரைவில் பினாங்கு மாநிலத்தில் நடத்தப்படவுள்ளது. இப்பட்டறையில் தேசிய வங்கியுடன் இணைந்து அனைத்து பொது வங்கிகளும் கலந்து கொள்ளும். இதன்வழி, வங்கிகளில் விதிக்கப்படும் நிபந்தனைகளைப் பற்றியும் வீடமைப்புக் கடனுதவி பற்றியும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டு விழிப்புணர்வு பெற இயலும். எனவே, பொதுமக்கள் இப்பட்டறையில் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.