பத்து காவான் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டோம் – பேராசிரியர்.

மக்களின் பிரச்சனைகளைக் களையவே எப்பொழுதும் முக்கியதுவம் வழங்கிக் கொண்டிருக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் பத்து காவான் கால்நடை வளர்ப்பாளர்களின் விவகாரத்திலும் நியாயமான முறையில் பினாங்கு மேம்பாட்டு கழகத்தினரால் மாற்று இடத்தை வழங்கிவிட்டது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.

கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி அவர்கள்.
கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி அவர்கள்.

இந்த மாற்று இடத்தைப் பெரும்பாலான கால்நடை வளர்ப்பாளர்கள் ஏற்றுக் கொண்ட போதிலும் அதைச் ஒரு சில குறிப்பிட்ட கால்நடை வளர்பாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதை சுட்டிக்காட்டினார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு அவர்கள் பலமுறை சம்மந்தப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுடன் பினாங்கு மேம்பாட்டு கழகம், வட செபராங் பிறை நகராண்மைக் கழக நில அலுவலகம் மற்றும் இதர அரசாங்க நிறுவனங்களுடன் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், சில தரப்பினர் ஒத்துழைக்க மறுப்பதால் இந்நிலைமை மேலும் மோசமடைகிறது. பல ஆண்டுகளாக இந்தக் கால்நடை வளர்ப்பாளர்களின் விவகாரம் தொடர்ந்து கொண்டு போகும் வேளையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மாநில அரசும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டும் மாற்று இடம் வழங்க முன்வந்துள்ளனர் என்றார் இரண்டாம் துணை முதல்வர் அவர்கள்.

முற்றாக உடைக்கப்பட்ட பழமை வாய்ந்த பிறை சந்தை.
முற்றாக உடைக்கப்பட்ட பழமை வாய்ந்த பிறை சந்தை.

மாநில அரசு தகுந்த உதவிகளை வழங்கியும் அதனை பெற்று கொள்ள மறுக்கும் தரப்பினரை கடுமையாக சாடினார் பேராசிரியர். அதோடு, பொறுப்பற்ற சில தரப்பினரின் தவறான விவாதங்களையும் குற்றச்சாட்டுகளையும் நிறுத்திவிடும்படி சூளுரைத்தார். இதனிடையே, பழமை வாய்ந்த பிறை சந்தையை முற்றாக உடைத்த வெல்விஸ் தனியார் நிறுவனத்தின் செயலையும் அதற்கு காவல்துறையினர் வழங்கிய ஆதரவையும் வன்மையாக கண்டித்தார் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ப.இராமசாமி அவர்கள்.} else {