பத்து காவான் பகுதியில் போக்குவரத்து பெருந்திட்டம் அமல்படுத்தவில்லை – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பிடிசி) பத்து காவான் போக்குவரத்து பெருந்திட்டம் அமல்படுத்தவில்லை மாறாக அப்பகுதியில் போக்குவரத்து ஆய்வு மற்றும் பண்டார் காசியா போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு செபராங் பிறை நகராண்மைக் கழகமும் போக்குவரத்து தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது. பண்டார் காசியா, பத்து காவான் பகுதியில் இந்த ஒப்புதல் கடித அடிப்படையில் போக்குவரத்து திட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

“பிடிசி கையிருப்பில் பத்து காவானில் இருக்கும் 2,946.7 ஏக்கர் நிலத்தில் கலவை மேம்பாட்டுத் திட்டம், தொழில்துறை பேட்டை மற்றும் மலிவு வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும்; கிழக்கு பத்து காவான் பகுதியில் 622.6 ஏக்கர் நிலம் (கலவை மேம்பாட்டுத் திட்டம் மற்றும்

தொழில்துறை பேட்டை); தென் பினாங்கு சாய்ன்ஸ் பார்க் (173.9ஏக்கர்) மற்றும் பைராம் (782.7 ஏக்கர்) ஆகிய இரு இடங்களிலும் தொழிற்பேட்டை அமைக்கப்படும்,” என 14-வது சட்டமன்ற இரண்டாம் தவணை க்கான முதல் கூட்டத்தொடரில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் அய்க் தொடுத்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

“மார்ச், 2019 வரை பத்து காவான் பகுதியில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்துறையில் ரிம10 பில்லியன் முதலீடும்; வியாபாரத் துறையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த கடித அடிப்படையில் ரிம17.8 பில்லியனும்;

மலிவு வீடமைப்புத் திட்டமான சூரியா 1-யின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம135 மில்லியனும், இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவிருக்கும் இரண்டாவது பிரிவு (சூரிய 2) திட்டத்திற்கு ரிம 127 மில்லியன் நிதி முதலீடுச் செய்யப்பட்டுள்ளது,” என மேலும் விளக்கமளித்தார்.