பத்து பிரிங்கி கடற்கரை நடவடிக்கைகளுக்கு புதிய அணுகுமுறை அறிமுகம்

செய்தியாளர் சந்திப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் மற்றும் பினாங்கு மாநகர் கழக தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப்.

பினாங்கின் தலைசிறந்த சுற்றுலா தளங்களின் ஒன்றான பத்து பிரிங்கி கடற்கரையில் நடத்தப்பட்டு வந்த பரசிலிங் கடற்கறை நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறையை கையாள பினாங்கு மாநகர் கழகம் திட்டம் வகுத்துள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
தொடற்ந்தார்போல் இக்கடற்கரை நடவடிக்கைகளில் சுற்றுப்பயணிகளுக்கு நேர்ந்த சிறு விபத்துகளின் காரணியாக இத்திட்டம் அமல்படுத்தவிருப்பதாக மேலும் அவர் குறிப்பிட்டார். பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையில் ஐந்து சோன்களில் 23 நீர் கைவினை நடவடிக்கை இயக்கும் நிறுவனங்கள் (pengusaha lancang air pulau pinang) சேவையில் உள்ளது. இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 13 பரசிலிங் விபத்துகள் பதிவாகியுள்ளன. இவ்விபத்துகளின் எண்ணிக்கைக் கடந்தாண்டை காட்டிலும் குறைவு என்றாலும் பினாங்கு சுற்றுலாத்துறைக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கவும் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இப்புதிய அணுகுமுறை இலகுவாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் பினாங்கு மாநகர் மன்ற தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப்.

பத்து பிரிங்கியில் அமல்படுத்தவிருக்கும் புதிய பரசிலிங் திட்டம்

பத்து பிரிங்கியில் செயல்ப்பட்டு வரும் 23 நீர் கைவினை நடவடிக்கை இயக்கும் நிறுவனங்கள் இழுவைப் படகு (Winch boat) பயன்படுத்துவதன் வழி பரசிலிங் விபத்துகள் நடப்பதை தவிர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது 23 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் இந்த இழுவைப் படகு கொண்டு பரசிலிங்
நீர் கைவினை நடவடிக்கையை மேற்கொள்கொண்றனர். இந்த இழுவைப் படகு கொண்டு நீர் கைவினை நடவடிக்கை இயக்கும் திட்டம் முழுமையாக வருகின்ற 1 ஜவனரி 2017-இல் அமல்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.