பினாங்கின் STEM சூழலமைப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழ் நுட்பம் முன்னுரிமை – ஜகதீப்

Admin
img 20260512 wa0026

ஜார்ச்டவுன் – மாநில அரசு, கல்வித் துறை மற்றும் அது தொடர்பான முகமைகளுடன் ஒன்றிணைந்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) வியூக ரீதியான ஒத்துழைப்பின் மூலம் வலுபடுத்த இணக்கம் கொண்டுள்ளது.

மாநில அரசு, கல்வித் துறை மற்றும் அது தொடர்பான முகமைகளுடன் ஒன்றிணைந்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) வியூக ரீதியான ஒத்துழைப்பின் மூலம் வலுபடுத்த இணக்கம் கொண்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் ஒரு முக்கியத் தொழில் மையமாகத் தனது நிலையை பினாங்கு மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்று இரண்டாம் துணை முதலமைச்சர் ஜகதீப் சிங் டியோ கூறினார்.

மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப், மாநில அரசுக்கும் பல்வேறு பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு STEM திட்டங்களில் 303,491 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளதுடன், ஊக்கமளிக்கும் வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது என்று கூறினார்.

இந்தச் சாதனைகள் பினாங்கு அறிவியல் கிளஸ்டர் (PSC), தெக் டோம் பினாங்கு (TDP) மற்றும் பினாங்கு அறிவியல் கிளஸ்டர் (PSC) ஆகிய மூன்று முக்கிய உந்துசக்தி முகமைகளின் மூலம் உருவாக்கப்பட்டன.

“இந்த STEM மையங்கள், மாணவர்களுக்குத் தொழில்நுட்ப யுகத்தின் திறன்களை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த வலையமைப்பாகச் செயல்படுகின்றன.

“மாநில அரசு உயர் தொழில்நுட்பத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, பினாங்கு இப்போது ‘ஆழ் நுட்பம்’ (Deep Tech) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையிலும் முன்னேறி வருகிறது,” என்று பதினைந்தாவது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது பதவிக்காலத்தின் முதல் கூட்டத்தையொட்டிய வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது ஜக்தீப் இவ்வாறு விளக்கினார்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜக்தீப், பினாங்கு STEM திறன் வியூகத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மாநில அரசு நிலையான திறனை மேம்படுத்தும் செயல்திட்டத்தையும் சீரமைத்து வருவதாக விளக்கமளித்தார்.

அவரது கூற்றுப்படி, இந்த முதன்மைத் திட்டம் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வை மற்றும் பினாங்கு பொருளாதாரச் சூழலமைப்பு மேம்பாட்டு வியூகம் (SEED) 2023-2028 ஆகியவற்றுக்கு இணங்க வகுக்கப்பட்டுள்ளது.

இந்த பெருந்திட்டத்தின் கீழ், ஐந்து கூறுகள் மூலம் திறமையாளர்களை உருவாக்குவது வலுப்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
அவை, செய்முறை அனுபவத்தின் மூலம் ஆரம்பத்திலேயே ஆர்வத்தைத் தூண்டுதல் (Ignite); இடைநிலைப்பள்ளிகளில் நிஜ உலக மற்றும் தொழிற்கல்வி அறிவியல் பயன்பாடுகளை ஒருங்கிணைத்தல் (Embed); பல்கலைக்கழக விரிவுரைகளுக்கும் தொழில்துறை யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல் (Immerse); திறன் மேம்பாடு மற்றும் மறுபயிற்சி மூலம் வாழ்நாள் கற்றலை வளர்த்தல் (Embrace); மற்றும் செயல் அடிப்படையிலான கொள்கைகள் மூலம் திறமையாளர்களை ஈர்த்துத் தக்கவைத்தல் (Enable) ஆகியவை அடங்கும்.

மேலும் கருத்து தெரிவித்த ஜக்தீப், பினாங்கில் தொழில்துறைக்கான தேவை தற்போது மிக உயர்ந்த மட்டத்திலும் உலக அளவில் போட்டித்தன்மையுடனும் இருப்பதால், திறன் பொருத்தமின்மை சவாலை சமாளிப்பதற்காகவே இதுவரை எடுக்கப்பட்ட முன்முயற்சி நடவடிக்கைகள் குறிப்பதாக கூறினார்.