பினாங்கில் அனைத்துலக தர விளையாட்டு அரங்கம்

ரெலாவ் நீச்சல் குளம்.

ரெலாவ் விளையாட்டு வளாகம் பிப்ரவரி மாதம் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். பினாங்கு மாநகர் கழகத்தின் ரிம21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இந்த விளையாட்டு வளாகம் 20 மாதம் கால வரையறையில் நிர்மாணிக்கப்பட்டது என்றார்.
இத்திட்டம் மற்றொரு மாநில அரசின் மக்கள் நல திட்டமாக இடம்பெறுவதாகத் தெரிவித்தார். பொது மக்கள் உடல் பயிற்சி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன் வழி பினாங்கின் சுகாதாரமான மாநில இலக்கு நிறைவடையும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மாநில அரசு கடந்த புக்கிட் குளுகோர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ரெலாவ் பகுதியில் ஒரு விளையாட்டு அரங்கம் நிர்மாணிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என அகம் மகிழ தெரிவித்தார். நம்பிக்கை கூட்டணி அரசு வாக்குறுதியை நிறைவேற்றும் என விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் தெரிவித்தார். மாநில அரசின் ‘வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது ” என்றார்

விளையாட்டு அரங்கத்தின் இறுதிக்கட்ட நிர்மாணிப்புப் பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் சீனப் பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா காணும் என்றார்.

பூப்பந்து அரங்கம்

நிகழ்வில் மாநகர் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில், கழக செயலாளர் இயோ சூன் இன் மற்றும் பொறியியலாளர் லோ மெய் ஈ கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு வளாகம் அனைத்துலக தரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டு தர நீச்சல் குளம் மற்றும் பூப்பந்து அரங்கம் அமைக்கப்பட்டது. இதன் வழி பினாங்கில் உலக தர விளையாட்டு அரங்கம் இடம்பெறுகிறது என்பது சாலச்சிறந்தது.