பினாங்கில் கூடுதல் முதலீடு இலக்கு – முதல்வர்

பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் முக்கிய பிரமுகர்கள்
பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் முக்கிய பிரமுகர்கள்

பினாங்கு மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம் அண்மையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி முகமது ரஷிட் பின் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் 2015-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இடம்பெற்ற முதலீட்டின் மூலம் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ரிம 5.4 பில்லியன் ஈட்டியுள்ளது. பினாங்கு முதலீட்டை இன்னும் அதிகரிக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, சிறந்த நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறினார். இதனிடையே, பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் 2016-2020 ஐந்தாண்டு பிரதான திட்டத்தையும் (pelan strategik) செய்தியாளர்களிடம் கூறினார். அவற்றுள்,

அ) புதிய பொருளாதார வளர்ச்சி உருவாக்குதல்
ஆ)வணிகம், தொழில்துறை, மற்றும் குடியிருப்புப் பகுதிகளை மேம்படுத்துதல்
இ) அனைத்து மக்களும் வீடு பெற்றிருக்க வேண்டும் எனும் நோக்கில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம்.
ஈ) சுற்றுலாத்துறை மேம்பாடு, நிலையான வருமானத்தை உருவாக்குதல்.
உ) பங்குதாரர்களுடன் தொடர்பு மற்றும் உறவுகளை மேம்படுத்துதல் என பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள்
நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள்

மேலும், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு இவ்வாண்டு சிறந்த சேவையும் ஒத்துழைப்பும் நல்கும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர்.}