பினாங்கில் திட்டமிடப்பட்டுள்ள நீர் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள முன்னெடுப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும்

Admin
7f4e12ae a240 4a96 8ad8 2223aae79746

ஜார்ச்டவுன் – நாளை முதல் ஜனவரி, 14 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள நீர் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மீண்டும் வலியுறுத்தினார்.

“பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், கூடுதல் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

“முதலில் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது, தற்போதைய எண்ணிக்கை மொத்தம் 100 தண்ணீர் தொட்டிகளையும் தாண்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள், தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் லாரிகள், நிலையான தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிற எண்ணிக்கையு இதில் உள்ளடங்கும். இது PBAPP மற்றும் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மற்றும் முன்முயற்சிகளையும் பிரதிபலிக்கின்றது.

மேலும், திட்டமிடப்பட்டுள்ள நீர் விநியோகத் தடைகளை எதிர்கொள்ளவும் பொது மக்கள் எதிர்நோக்கும் பாதிப்பைக் குறைக்கவும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“PBAPP-க்கு ஏராளமான விமர்சனங்கள் பெறப்பட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலைக்குத் தீர்வுக் காண்பதில் கவனம் செலுத்துவோம்,” என்று பினாங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 19 மனுதாரர்கள் கையெழுத்திட்ட மனு தொடர்பாக முதலமைச்சர் நிறுபருக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இந்த மனுவானது, பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மேலும் தண்ணீர் தொட்டிகள் அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதையே நோக்கமாகக் கொண்டதாக சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

“மனுதாரர்கள் இந்த நடவடிக்கையை எதிர்க்கவில்லை. மேலும், இந்தச் செயல்பாட்டை வெற்றியடையச் செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று நீர் கசிவு ஏற்படும் 1,200மிமீ கட்டுப்பாட்டு வால்வுகளை மாற்றுவதற்காக சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு ஆலையில் (WTP) ஏற்படும் நீர் விநியோகத் தடை குறித்து சாவ் விளக்கமளித்தார்.

அதுமட்டுமின்றி, இந்த மனுவில் நீர் விநியோகத் தடைகளின் போது 1,000 முதல் 2,000 லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டிகள் போதுமான அளவில் வழங்குவதை உறுதிசெய்யவும், வீடுகள் மற்றும் வணிகங்கள் இரண்டிலும் ஏற்படும் பாதகமான தாக்கங்களைத் தணிக்கவும் மாற்று வழிகளை ஆராயவும் PBAPP ஐ வலியுறுத்தியது.