பினாங்கில் நான்கு மடங்கு மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டுள்ளது- ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ

பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு தேசிய முன்னணி அரசாங்கத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு மலிவு விலை வீடுகள் நிர்மாணித்து வழங்கியுள்ளது. மத்திய கூட்டரசு அமைச்சர் டத்தோ ஶ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சோர் பினாங்கு மாநிலத்தை கூட்டரசு மாநிலமாக பிரகடனம் செய்வதற்கு முக்கிய காரணமாக பினாங்கு மக்களுக்கு அதிகமான மலிவு விலை வீடுகள் வழங்கப்படும்எனக் குறிப்பிட்டதற்கு இவ்வாறு தெரிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.

நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் கீழ் 2008 முதல் 2015-ஆம் ஆண்டு வரை குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் 20,887 யூனிட் கட்டப்பட்டுள்ளன. அதேவேளையின் தேசிய முன்னணியின் ஆட்சியில் (2000-2007) வரை 5,124 யூனிட் வீடுகள் மட்டுமே பினாங்கில் கட்டப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

மேலும் 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மலேசிய மக்கள் வீடமைப்புத் திட்டம்(பிரிமா) கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் மலிவு விலை வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தும் இன்று வரை பினாங்கில் ஒரு யூனிட் வீடுகள் கூட கட்டப்படவில்லை என கண்டனம் தெரிவித்தார். ஒரே மலேசிய அரசு ஊழியர்கள் வீடமைப்புத் திட்டத்திலும் கூட வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லை.

இருப்பினும் 2015-ஆம் ஆண்டு இறுதியில் பிரிமா வீடுகள் கட்டுவதற்கு மாநில அரசாங்கத்திடம் விண்ணப்பம் வழங்கிய போதும் அந்த விண்ணப்பங்கள் மாநில அரசாங்கத்தின் மலிவு விலை வீடமைப்புத் திட்ட வழிகாட்டலுக்கு இணக்கம் வழங்காத நிலையில் மேலும் தாமதம் ஏற்படுவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் திரு ஜெக்டிப்.

தற்போது பினாங்கு அரசு தனியார் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து 18,387 யூனிட் வீடுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி வருகின்ற 10-15 ஆண்டு காலக்கட்டத்தில் மலிவு விலை வீடு ஏ வகை (ரிம42,000) மற்றும் சி வகை ( ரிம300,000) வீடுகள் மொத்தமாக 65,796 யூனிட் வீடுகள் கட்டப்படும் என்றார்.

மத்திய கூட்டரசு அமைச்சர் டத்தோ ஶ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சோர் பினாங்கில் அதிகமான முதல் மலிவு விலை வீடு வாங்க முற்படும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு மத்திய அரசு தோல்வி தழுவியதை நினைவில் கொள்ள வேண்டும்என்றார் ஜெக்டிப்.