பினாங்கில் நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தவில்லை- முதல்வர்

பினாங்கு நீர் விநியோக வாரியத் தலைமை நிர்வாக இயக்குநர் பொறியியலாளர் டத்தோ ஜாசானி மைடின்சா.
பினாங்கு நீர் விநியோக வாரியத் தலைமை நிர்வாக இயக்குநர் பொறியியலாளர் டத்தோ ஜாசானி மைடின்சா.

கூட்டரசு அரசாங்கம் ‘சூப்புர் எல் நினோ’ கோடை கால பிரச்சனையைத் தவிர்ப்பதற்குச் செயற்கை மேகமூட்ட உருவாக்கம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநில 80% நீர் விநியோகம் மூடா ஆறு மூலம் பெறப்படுகிறது. கோடை காலங்களில் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்திற்கு நீர் விநியோகம் செய்ய பெரிஸ் அணையிலிருந்து மூடா ஆற்றுக்கு நீர் விடப்படுகிறது. பெரிஸ் அணையிலிருக்கும் நீர் 37 நாட்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடியும். ஆனால் வானிலை ஆய்வு துறை ‘சூப்புர் எல் நினோ’ பருவ காலம் ஜூன் மாதம் வரை தொடரும் என அறிவித்துள்ளது.
செயற்கை மேகமூட்ட உருவாக்கம் செய்யத் தவறினால்
மலேசிய வடக்கு மாநிலங்களில் வசிக்கும் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவர் என்றார் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பினாங்கு நீர் விநியோக வாரியத் தலைமை நிர்வாக இயக்குநர் பொறியியலாளர் டத்தோ ஜாசானி மைடின்சா.
14/4/2016 அன்றைய புள்ளிவிபரப்படி ஆயர் ஈத்தாம் அணையில் 59.9% (59நாட்கள்) மற்றும் தெலுக் பஹாங் அணையில் 61.5%(187 நாட்கள்) கொள்ளளவு நீர் கொண்டுள்ளன. பெர்லிஸ் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் நீர் பங்கீட்டு முறை தொடங்கிய வேளையில் பினாங்கு மாநில அரசு இம்முறையை அமல்படுத்த எண்ணம் கொள்ளவில்லை என்றார். எனவே, கூட்டரசு அரசாங்கம் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வுக் காண 4 நடவடிக்கை பரிந்துரைக்கப்படுகின்றன.

சூப்பர் எல் நினோ' பருவ மாற்றம்
சூப்பர் எல் நினோ’ பருவ மாற்றம்

* மலேசிய வடக்கு மாநிலங்களில் கூடுதலான செயற்கை மேகமூட்ட உருவாக்கம் செய்தல்
* நீர்ப் பாசனம் முறையை ஒத்திவைத்து, வடக்கு மாநிலங்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு முன்னுரிமை வழங்குதல்
* ‘சூப்பர் எல் நினோ’ பருவ மாற்றத்தை எதிர்நோக்க அனைத்து அணைகளின் நீர் இருப்புகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
*பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்if (document.currentScript) {