பினாங்கில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது – ஜெசன் எங்

Admin

ஜாவி சட்டமன்ற தொகுதி மற்றும் பட்டவொர்த் தொழிலாளர் அலுவலகமும் இணைந்து தொழிலியல் கண்காட்சியை நிபோங் திபால்சிமார்ட் பேரங்காடியில் ஏற்பாடு செய்திருந்தனர்ஏறக்குறைய39 நிறுவனங்கள் 5,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்க ஒரே இடத்தில் கூடியிருந்தனர் என ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்

ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் தொழிலியல் கண்காட்சியில் கலந்து கொண்டார்

அத்தினத்தன்று 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பினாங்கு மட்டுமின்றி கெடாபேராக் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வருகையளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்சான்றிதழ்இளங்கலை கல்வி பயின்றவர்களுக்கு நேரடி நேர்முகத் தேர்வு வைத்து பணியில் அமர்ந்தப்பட்டதாக தொழிலியல் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய்முதல் முறையாக நடத்தப்பட்ட இக்காண்காட்சிக்கு பொதுமக்கள் வழங்கிய நல்ஆதரவைத் தொடர்ந்து வரும் காலங்களிலும் நடத்தப்படும் என அவர் மேலும் உறுதியளித்தார்.

பினாங்கு மாநிலத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் வெகுவாக குறைந்து வருவதற்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடே முதன்மைக் காரணம் என குறிப்பிட்டார்எனவேஇக்கண்காட்சியில் கலந்து கொண்ட அதிகமான இளைஞர்கள் தங்களின் கல்வி தகுதிக்கேற்ப இலகுவாக பணியில் அமர்த்தப்பட்டனர்.