பினாங்கு இந்து அறப்பணி வாரியம் விசாரணைக்குத் தயார் – பேராசிரியர்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பத்து கவான் தோட்ட ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் உண்டியல் பணம் மற்றும் அம்பாளின் நகைகள் ஆகியவற்றை கைப்பற்றியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை வண்மையாகக் கண்டித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. இதன் தொடர்பாக அந்த ஆலய தலைவர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 36 காவல்துறை புகார்கள் இந்து அறப்பணி வாரியத்தின் மேல் பதிவுச் செய்துள்ளனர். இச்செயலை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வண்மையாகச் சாடினார் இரண்டாம் துணை முதல்வர்.
இந்து அறப்பணி வாரியம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையற்றது என நிரூபிக்க பினாங்கு மாநில காவல்துறையின் வணிக குற்றச்செயல் அதிகாரி டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹிம் ஹானாபி அவர்களின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் இந்து அறப்பணி வாரிய நிர்வாக தலைவர் திரு இராமசந்திரன். கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் திகதி பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(பிடிசி) கீழ் இருக்கும் இந்து ஆலயங்களின் நிலங்களையும் இந்து மயானங்களையும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நிர்வகிக்கும் என்று பி.டி.சி கடிதம் வழங்கிவிட்டது. கடந்த ஜுலை மாதம் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பத்து கவான் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தை நிர்வகிக்க, தற்காலிக செயற்குழுவை நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். அத்தற்காலிக நிர்வாகத்திடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க கூறியிருந்தாலும் முன்னாள் நிர்வாகத்தினர் பொருட்படுத்தவில்லை. அப்படியிருக்கையில், அந்த ஆலயத்தின் நகைகள் எல்லாம் இந்து அறப்பணி வாரியம் எடுத்து கொண்டது என எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார் இரண்டாம் துணை முதல்வர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இதுவரை எந்தவொரு ஆலயத்தின் பணம், நகை எடுத்து கொண்டது கிடையாது. மாறாக, இந்து அறப்பணி வாரியத்தின் வருமானத்தை இந்திய மாணவர்களின் உயர்க்கல்விக்கு உபகாரச் சம்பளமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, இவ்வாரியத்தின் கணக்குகள் யாவும் சரியாக இருக்கும் பட்சத்தில் எங்கள் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளலாம் என்றார். மேலும், முன்னாள் நிர்வாகத்தினர் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் உண்மைக்கு புரண்பானது என்பதால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார் பேராசிரியர் ப.இராமசாமி.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);