பினாங்கு இந்து அறப்பணி வாரிய கல்வி உபகாரச் சம்பளம் விண்ணப்பிக்கும் இறுதிநாள் செப்டம்பர்,30

Admin

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சமூகநலன், சமயம் மட்டுமின்றி கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை 2981 மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.

அண்மையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய ஆணையர் குழுவினர் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

எனவே, சான்றிதழ், டிப்ளோமா, இளங்கலை ஆகிய மேற்கல்வியைத் தொடரும் இந்து மாணவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். தேர்வுப் பெற்ற ஒவ்வொரு மாணவரும் அவரவரின் கல்வி தகுதிக்கேற்ப உபகாரச் சம்பளம் பெறுவர் .
விண்ணப்பதாரர்கள் பினாங்கில் பிறந்தவர், பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அல்லது பினாங்கு மாநிலத்தின் நிரந்திர குடிமக்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எனும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் விண்ணப்பப் பாரங்களை கொம்தார் 30-ஆவது மாடியில் அமைந்துள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மாணவர்கள் www.hebpenang.gov.my என்ற பினாங்கு இந்து அறப்பணி வாரிய அகப்பக்கத்தின் வழி பாரங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் செப்டம்பர், 30 ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில், இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.