பினாங்கு இலவச கட்டற்ற இணைய சேவை கூடுதல் மேம்பாடு

பினாங்கு இலவச கட்டற்ற இணைய சேவை (Penang Free Wifi) பயனர்கள் மிக வேகமாக இணையத்தை அணுக 500% பேக்ஹால் அலைவரிசை (backhaul bandwidth) பொருத்தப்பட்டுள்ளன என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் தீவுப் பகுதி மட்டுமின்றி பெருநிலப்பகுதி பொது இடங்களில் இந்த இலவச சேவைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாநில அரசு பேக்ஹால் அலைவரிசையை 5 மடங்கு அதாவது 75Mbps இருந்து 375Mbps அதிகரிக்க இலவச கட்டற்ற இணைய சேவையின் வேகம் 512kbps இருந்து 1Mbps ஆக உயர்ந்துள்ளது . கடந்த 2009-ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி அரசு இலவச கட்டற்ற இணைய சேவையை மாநிலத்தின் 40 தொகுதிகளில் 1,550 ஹாட்ஸ்பாட்கள் பொருத்தப்பட்டு அனைவரும் இணைய சேவை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.

logo-penang-free-wifi
ஆறு ஆண்டுகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும் இலவச கட்டற்ற இணைய சேவையை 600,000 பதிவுப்பெற்ற பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது பாராட்டக்குறியது . தினமும் சராசரி 20,000 பயனர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டு வேகம் குறைகிறது என ரெட்டோன் தலைமை நிர்வாக அதிகாரி சாய்புபாரிம் சாலே குறிப்பிட்டார் . எனவே, மாநில அரசு இணைய சேவையின் வேகத்தை மேம்படுத்தும் பொருட்டு 300Mbps அலைவரிசை பொருத்த ரெட்டோன் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பேக்ஹால் அலைவரிசை அதிகரிப்பதால் மாநில அரசு கூடுதலாக ரிம25,000 அதாவது ரிம129,200 இருந்து ரிம154,200 செலுத்த வேண்டியுள்ளது என்றார் முதல்வர். எனவே, அனைவரும் இலவச கட்டற்ற இணைய சேவையை பதிவுச் செய்து வேகமாகவும் இலகுவாகவும் பயன்படுத்தலாம் என்றார்.}