பினாங்கு மாநகர் கழக மதிப்பீட்டு வரியை குறிப்பிட்ட தவணையில் செலுத்துவீர்

மதிப்பீட்டு வரி செலுத்த தவறிய கொம்தாரில் அமைந்துள்ள வணிகக் கடை மீது பினாங்கு மாநகர் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மதிப்பீட்டு வரி செலுத்த தவறிய கொம்தாரில் அமைந்துள்ள வணிகக் கடை மீது பினாங்கு மாநகர் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பினாங்கு மாநகர் கழகம் வணிகக் கடைகள், குடியிருப்புகள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மதிப்பீட்டு வரியை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகின்றது. இதனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செலுத்திவிட தவறும் தரப்பினருக்கு அண்மையில் பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சிறப்பு குழுவினருடன் பினாங்கு மாநகர் கழக நிதி நிர்வாக அதிகாரி ஜோசப் எங் சூன் சியாங் உடன் சென்று மதிப்பீட்டு வரி செலுத்த தவறிய குடியிருப்பாளர் மற்றும் வணிகங்களுக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தனர்.
பல நோட்டிஸ்கள் பினாங்கு மாநகர் கழகம் அனுப்பியும் கொம்தாரில் அமைந்துள்ள வணிகக் கடை ஒன்று ரிம20,000 வரை மதிப்பீட்டு வரி செலுத்த தவறியதால் அக்கடையை உடைத்து பொருட்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் பினாங்கு மாநகர் கழக ஊழியர்கள் ஈடுப்பட முற்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோசப் எங் குறிப்பிட்டார். மேலும், ஜாலான் மெக்கலம் தாமான் பெலாங்கியில் அமைந்துள்ள இரண்டு குடியிருப்பு வீடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது என மேலும் விவரித்தார்.
எனவே, மதிப்பீட்டு வரியை செலுத்த தவறிய வணிகர்கள், குடியிருப்பாளர்கள் உடனடியாக பினாங்கு மாநகர் கழகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு செய்ய தவறும் தரப்பினர் இடையே கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.} else {