உடல்பேறு குறைந்தவருக்கு உதவிக்கரம் நீட்டுவோம் – நேதாஜி இராயர்

உடல்பேறு குறைந்தவருக்கு பால் பொட்டலத்தை எடுத்து வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்.
உடல்பேறு குறைந்தவருக்கு பால் பொட்டலத்தை எடுத்து வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்.

சுங்கை குளுகோரில் வாழ்ந்து வரும் உடல்பேறு குறைந்த முகமது ரிஷ்வான் இஸ்மாயில் நேரில் சென்று பார்வையிட்டனர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர்.
முகமது ரிஸ்வான் பிறப்பிலிருந்தே பேசும் ஆற்றல், உடல் வலிமை இழந்து சுய வேலைகள் செய்ய முடியாமல் அவலநிலையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தற்போது உணவு பதார்த்தம் வாங்க முடியாத நிலையில் இவரின் தந்தை இஸ்மாயில் திரு,நேதாஜி இராயரின் உதவியை நாடியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து அந்நபருக்கு பால் பொட்டலம் மற்றும் ‘டய்ப்பர்’ உபகரணத்தை தொடர்ந்து வழங்குவதாக குறிப்பிட்டார். முகமது ரிஸ்வானை நேரில் சென்று பார்வையிட்ட போது அவருக்கு 12 பால் பொட்டலத்தை வழங்கினார்.
ரிஸ்வான் பிறந்தவுடன் ஏற்பட்ட காய்ச்சலில் உடல் வலிமையற்று இன்று வரை துன்பத்தை எதிர்நோக்குகிறார் என இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒரு பால் டின் மூன்று நாட்களுக்கு உபயோகிக்கலாம் எனக் கூறி உதவிக்கரம் நீட்டிய திரு நேதாகி இராயருக்கு நன்றி நவில்ந்தார்.}