பினாங்கு மாநில தொழிலாளர்களின் நலன் பேணப்படும்- பேராசிரியர்

படம் 1: பினாங்கு பணிநியமனச் சட்டம் கருத்துக்களம் 2015 (Penang Employment Law Forum 2015)  உரையாற்றினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.
படம் 1: பினாங்கு பணிநியமனச் சட்டம் கருத்துக்களம் 2015 (Penang Employment Law Forum 2015) உரையாற்றினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.

பினாங்கு பணிநியமனச் சட்டம் கருத்துக்களம் 2015 (Penang Employment Law Forum 2015) நான்காவது ஆண்டாக ஜென் தங்கும்விடுதியில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மாநில பொருளாதார திட்டமிடல் மற்றும் மனித வள ஆட்சிக்குழுவுடன் இணைந்து மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (EPU) மற்றும் பினாங்கு மனித வள தொடர்பு ஆலோசனைக் குழுவும் இக்கருத்துகளத்தை ஏற்பாடுச் செய்திருந்தனர். இதில் பெர்லிஸ், பேரா, கெடா, கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் இருந்து 192 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இக்கருத்துக்களம் தொழிற்துறை நிறுவன பங்கேற்பாளர்களிடையே கருத்துகள் பரிமாறிக்கொள்ளும் சிறந்த தளமாக அமைவதோடு மற்றும் அவர்களிடையே சிறந்த ஒத்துழைப்பு உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் பேராசிரியர். தொழில் முனைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை என்றார். எனவே, பினாங்கு மாநில அரசு தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் காக்கப்படும் என சூளுரைத்தார்.

பினாங்கு மாநில அரசு மனித வளத்தை மேம்படுத்துவதோடு திறன்மிக்க

படம் 2: நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள்
படம் 2: நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள்

தொழிலாளர்களை உருவாக்குவதில் தற்போது அதிக அக்கறை காட்டி வருகிறது. பினாங்கு மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கிற போதிலும் திறன்மிக்க தொழிலாளர்கள் வெளிநாடுகளிலும் பிற மாநிலங்களிலும் வேலைக்குச் சென்று விடுவது குறிப்பிடத்தக்கதாகும். மலேசிய தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையம் (MIDA) கணக்காய்வின்படி, இவ்வாண்டு தொடக்கத்தில் 13,199 வேலை வாய்ப்புகள் பினாங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் பயிற்சி (the merger and acquisition exercises) நடத்துவதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களை பினாங்கு மாநிலம் உருவாக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.}