பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்ட அகப்பக்கம் அறிமுகம் கண்டது.

பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்டத்தை அறிமுகப் படுத்தினார் மாநில முதல்வர் (உடன் அரசியல் தலைவர்கள்)
பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்டத்தை அறிமுகப் படுத்தினார் மாநில முதல்வர் (உடன் அரசியல் தலைவர்கள்)

பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை நெரிசல் பிரச்சனைக்கு முக்கிய தீர்வாகப் போக்குவரத்து பெருந்திட்டம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். போக்குவரத்து பெருந்திட்டம் குறித்த பல விளக்கக்கூட்டங்கள் பினாங்கு மாநிலம் முழுவதும் பொதுமக்கள், மீனவர் வர்கத்தினர், அரசு சாரா இயக்கங்கள், பொது இயக்கங்கள் என அனைவருடன் நடத்தப்பட்டன. இத்திட்டம் பற்றிய அனைவரின் கருத்தினை அறிந்துகொள்ளும் நோக்கில் பல விளக்கக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் .
பினாங்கு மாநில போக்குவரத்துப் பெருந்திட்டம் பற்றிய மேல்விபரங்கள் அறிந்து கொள்வதற்கும் அனைவரின் கருத்துகளை பதிவுச் செய்யவும் மாநில அரசு முயற்சியில் “போக்குவரத்து பெருந்திட்டம் அகப்பக்கம்” அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். [email protected] எனும் அகப்பக்கத்தின் வழி பினாங்கு வாழ் மக்கள் இத்திட்டத்தை பற்றிய கூடுதல் விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இப்போக்குவரத்து பெருந்திட்டம் ஏறக்குறைய ரிம27 பில்லியன் செலவில் உருவாகவுள்ளது. இந்தப் பெருந்திட்டத்தில் வாடகை கார், பேருந்து, விரைவு இரயில், கேபள் கார், கப்பல் ஆகிய 5 போக்குவரத்தை உள்ளடக்கியுள்ளன.
இதன் மூலம், சாலை, நெடுஞ்சாலை, கடல் வழி பாதை, இரயில் பாதை, நீர் போக்குவரத்து, கேபள் கார் ஆகியவை நிர்மாணிப்பதன் மூலம் வாகன நெரிசல் பிரச்சனை வருகின்ற 50 ஆண்டுகளில் தீர்வுக் காணப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் தெளிவுப்படுத்தினார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ்விரு பிரதான திட்டங்களும் கொன்சோர்த்தியம் தனியார் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெளிவுப்படுத்தினார் சாவ் கொன் யாவ். இத்திட்டத்திற்காக மாநில அரசு மூன்று குழுக்களை ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் அவர்களின் தலைமையில் நியமித்துள்ளன.
எனவே, இப்போக்குவரத்து பெருந்திட்டம் பற்றிய கேள்விகள் மற்றும் விவரங்கள் அறிந்துகொள்ள விரும்பும் தரப்பினர் இந்த அகப்பக்கத்தை அணுகலாம். பினாங்கை அறிவார்ந்த வளர்ச்சியடைந்த நகரமாக உருமாற்றும் முயற்சியில் மாநில அரசு பொதுமக்களின் நலனுக்காக பல திட்டங்களை அமல்படுத்துவது பாராட்டக்குரியதாகும்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);