பினாங்கு மாநில மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் “தீட்சை முகாம்”

தீட்சை முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் எடுத்து வழங்கினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
தீட்சை முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் எடுத்து வழங்கினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

பினாங்கு மாநில மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் “தீட்சை முகாம்” பிறை தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மூன்று நாட்களுக்கு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வு பிரத்தியேகமாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர்.

இத்தீட்சை முகாமை முன்னின்று வழிநடத்தி சிறுவர்களுக்கு நமது இந்து மத உபதேசங்களையும் மந்திரங்களையும் போதித்து ஓர் இந்துவாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்து, ஜப மாலை அணிவித்து தீட்சை வழங்கினார் நமது நாடறிந்த ‘வேத ஆகம ஞான பாஸ்கர்’ சிவ ஸ்ரீ அ.ப முத்து குமார சிவச்சாரியார்.
இந்நிகழ்வின் முடிவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி . இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் இந்துவாகவே இறக்க வேண்டும் என்றும் இந்துவாக பிறக்க பெருமையடைய வேண்டும் என தமதுரையில் கூறினார். பினாங்கு மாநிலம் அரசு சாரா இயங்கங்களின் சேவைகளுக்கு என்றும் வற்றாத ஆதரவு நல்கும். இத்தீட்சை முகாம் வழி மாணவர்கள் தீய வழிகளில் ஈடுப்படாமல் நல்லொழுக்கம் கொண்ட தலைச்சிறந்த மாணவராக உருவெடுக்க இம்மாதிரியான நிகழ்வுகள் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் இரண்டாம் துணை முதல்வர் .

தீட்சை முகாமில் கலந்து கொண்ட சிறுவன்
தீட்சை முகாமில் கலந்து கொண்ட சிறுவன்

இவ்விழா வெற்றிப் பெற அயராது உழைத்த தீட்சை முகாம் ஏற்பாட்டுக் குழுவினருக்கும், மாநில செயற்குழு உறுப்பினருக்கும், தீட்சைப் பெற கலந்து கொண்ட சிறுவர்களுக்கும், தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில தலைவர் ஸ்ரீ காசி சங்கபூசன். மேலும் தமிழ்ப்பள்ளி, இந்து ஆலயங்கள், மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகளும் வழங்கி வரும் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வருக்கும் தமது பாராட்டினைத் தெரிவித்தார்.