பினாங்கு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதிய இந்து சங்கம்

மேம்பாட்டு வாரியத்தின் இந்து சங்க நிர்வாகக் குழுவினருடன் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேம்பாட்டு வாரியத்தின் இந்து சங்க தலைவர் திரு விக்னேஸ் பிரபு குத்து விளக்கேற்றினார். (உடன் ஆலோசகர் திரு பாஸ்கரன்)
மேம்பாட்டு வாரியத்தின் இந்து சங்க நிர்வாகக் குழுவினருடன் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
மேம்பாட்டு வாரியத்தின் இந்து சங்க தலைவர் திரு விக்னேஸ் பிரபு குத்து விளக்கேற்றினார். (உடன் ஆலோசகர் திரு பாஸ்கரன்)

கடந்த 26/9/2015-ஆம் நாள் பினாங்கு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதியதாக இந்து சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராக திரு விக்னேஸ் பிரபு பதவியேற்றார். மேலும் இச்சங்கத்தில் மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஏறக்குறைய 60 ஊழியர்கள் உறுப்பினர்களாகவும் முக்கிய பொறுப்புகளும் வகிக்கின்றனர். மேலும் இந்த வாரியத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிய திரு பாஸ்கரன் அவர்கள் ஆலோசகராகத் திகழ்கிறார்.
பினாங்கு மாநிலத்தில் புதியதாக உதயமாகியிருக்கும் மேம்பாட்டு வாரியத்தின் இந்து சங்கத்தை இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வமாகக் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். இச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கு ஆசி வழங்கி சிறப்புடன் வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்தியர்களுக்காக பல சங்கங்கள் தோன்றினாலும் அதில் சில சங்கங்களே திறம்பட செயல்படுகின்றன. எனவே, புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சங்கம் வெற்றிப்பெற தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு ஆட்சி பீடம் அமைத்த பிறகு பினாங்கு மேம்பாட்டு வாரியத்தில் அதிகமான இந்தியர்கள் பணி நிமித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்பு குறைவான இந்தியர்களே இடம் பெற்றனர் என்பதை சுட்டிக்காட்டினர் பேராசிரியர்.

இச்சங்கத்தின் மதம் & ஆன்மீகம், கலை & கலாச்சாரம், மொழி & இலக்கியம், சமூக நலம் ஆகிய நான்கு பிரிவுகளாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதம் & ஆன்மீகம் சார்ந்த பொங்கல் விழா, தீபாவளி கொண்டாட்டம் போன்ற சமூக நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றார் தலைவர் திரு விக்னேஸ் பிரபு. அதுமட்டுமன்றி தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாதாகவும் தெரிவித்தார்.