பினாங்கு வாழ் மக்களின் சுகாதாரத்திற்கே முன்னுரிமை – முதல்வர்

மாநில முதல்வர் ராபிஸ் தொற்றுநோய் பற்றிய சுகாதரத் துறை அறிக்கையைக் காண்பிக்கிறார்.
மாநில முதல்வர் ராபிஸ் தொற்றுநோய் பற்றிய சுகாதரத் துறை அறிக்கையைக் காண்பிக்கிறார்.

தற்போது “ராபிஸ்” எனும் தொற்றுநோய் வெறி நாயின் தாக்கத்தால் மனிதர்களுக்குப் பரவப்படுவது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்நோயினால் பினாங்கு மாநிலத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டதை அறிந்த மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பாதுகாக்கப்படாத நாய்களை உடனடியாக ஒழித்துடுமாறு பணித்தார். வெறிப்பிடித்த நாய் காணப்படும் பகுதி (பினாங்கு மாநிலம்) 2015 பிரிவு 42(4) விலங்கு சட்டம் 1953 (சட்டம் 647), கீழ் இச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநில சுகாதரத் துறை இயக்குநர் இச்சட்டத்தை செயல்முறை படுத்த முடியும்.
ராபிஸ்” எனும் நோய் முதலில் பெர்லிஸ் மற்றும் கெடா மாநிலத்தைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தை தாக்கியுள்ளது. இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கே அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பாஹாருடின் தெரிவித்தார். கால்நடை துறையின் அறிக்கைப்படி கடந்த 21 செப்டம்பர் வரை நாய் கடிக்கு 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகமான வழக்குகள் வெறிப்பிடித்த நாயினால் தாக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளன.

ராபிஸ் தொற்றுநோய் ஒழிப்பதற்கு நடத்திய அதிரடி நடவடிக்கையில் 342 நாய்கள் கொல்லப்பட்டன. அதில் 50 நாய்களின் மாதிரிகள் ராபிஸ் தொற்றுநோய் பரிசோதனைக்காக கால்நடை ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பப்பட்டன.
அதுமட்டுமின்றி கால்நடை துறையினர் ராபிஸ் தொற்றுநோய் குறித்து 116 விழிப்புணர்வு பட்டறைகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பட்டறை கிராம மற்றும் குடியிருப்புப் பகுதி, கால்நடைப் பண்ணைகள், மற்றும் பொது இடங்களில் நடத்தபடும். இப்பட்டறை தோற்றுநோயிலிருந்து தங்களின் வளர்ப்பு நாய்களைப் பாதுகாக்க நோய் தடுப்பு ஊசி அவசியம் போட வேண்டும் என பொது மக்கள் அறிந்து கொள்ள துணைபுரியும்.
அரசு சாரா இயக்கங்கள் மாநில அரசின் இந்நடவடிகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் மக்களின் சுகாதரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு தொடர்ந்து வெறிப்பிடித்த நாய்கள் ஒழிக்கும் செயலில் ஈடுப்படும் என முதல்வர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.