பினாங்கு விலங்கு நல சங்கத்தின் அறப்பணி இரவு

Admin

பினாங்கு விலங்கு நல சங்கத்தின் அறப்பணி இரவு கைவிடப்பட்ட, தெருக்களில் பிறந்த நாய்கள் மற்றும் பூனைகளுக்குத் தங்குமிடம், உணவு, மருத்துவ செலவுகளுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது என உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரணக் குழுத் தலைவரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். பார்பரா ஜென்சன் என்பவர் ஜெர்மனியில் இருந்து மலேசியாவிற்குத் தமது ஓய்வூதிய ஆண்டுகளைக் கழிக்க வந்த போது தெருக்களில் ஆங்காங்கே நாய்கள் சுற்றித் திரிவதை கண்டு வியப்படைந்து அவைகளைக் கொண்டு சென்று பராமரித்து வந்தார். பிறகு தெலோக் பஹாங்கில் ஒரு மையத்தை அமைத்து தற்போது 250 நாய்களையும் 65 பூனைகளையும் 5 அன்னிய தொழிலாளர்கள் துணையுடன் பராமரித்து வருவது பாராட்டக்குறியதாகும்.

பார்பரா ஜென்சன் அவர்களுக்குக் காசோலை வழங்குகிறார் உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரணக் குழுத் தலைவரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் அவர்கள்
பார்பரா ஜென்சன் அவர்களுக்குக் காசோலை வழங்குகிறார் உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரணக் குழுத் தலைவரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் அவர்கள்

இப்பிராணிகளுன் அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒரு மாதத்திற்குத் தலா ரிம 20,000 தேவைப்படுகிறது. இப்பணப் பற்றாகுறையைச் சமாளிக்க இவ்வறப்பணி இரவை நடத்தினார் பார்பரா அவர்கள். இந்நிகழ்வின் நுழைவுச்சீட்டு ரிம100 விற்கப்பட்டது. இந்நிகழ்வில் வசூலிக்கப்படும் பணத்தொகையை இச்சங்கத்தின் பராமரிப்புக்குப் பயன்படுத்தப்படும் என்றார். எனவே, மனிதநேயத்துடன் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கூறியதோடு தமது ஒதுக்கீடு நிதியிலிருந்து ரிம 3,000-ஐ வழங்கிச் சிறப்பித்தார். பினாங்கு நகராண்மைக் கழகத் துணையுடம் விரைவில் பினாங்கு மாநிலத்தில் விலங்கு நல மையத்தின் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றார்.

அதோடு, இந்த பினாங்கு விலங்கு நல சங்கத்திற்கு தற்போது அதிகமான சுற்றுப்பயணிகள் வருவதாகக் கூறினார். இம்மையம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மணி 2.00 முதல் 5.00 வரை மட்டுமே சுற்றுப்பயணிகளின் காட்சிக்கு திறந்திருக்கும். அந்த மையத்தில் இருக்கும் அனைத்து பிராணிகளைப் பற்றிய தகவல்களும் பயணிகளுக்கு வழங்கப்படும் என்றார்..