பினாங்கு இளம் அனைத்துலக ஐக்கிய சங்கத்தின் உடல் ஊனமுற்றோர் தொழிலியல் கண்காட்சி 2013

Admin

பினாங்கு இளம் அனைத்துலக ஐக்கிய சங்கத்தின் (Junior Chamber International United Penang) ஏற்பாட்டில் உடல் ஊனமுற்றோர் தொழிலியல் கண்காட்சி 2013 பினாங்கு அனைத்துலக பிசா அரங்கத்தில் கடந்த 23-24 நவம்பர் 2013-யில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கமானது மாற்றுத்திரனாளிகளிடையே ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை வெளிக்கொண்டு வருவதே ஆகும். பினாங்கு மாநிலத்தில் 1% உடல் ஊனமுற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 7000 பேர் மட்டுமே தங்களை பொதுநல சங்கத்தில் பதிவுச்செய்துள்ளனர். இந்த தொழிலியல் கண்காட்சி மூலம் இவர்களின் திறமை மற்றும் ஆற்றல்களை அனைத்துத் துறைகளிலும் ஈடுப்பட ஊன்றுகோளாக அமையும்.

அதோடு, உடல் ஊனமுற்றோர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் அவர்களை மேம்படுத்தத் தொழில் முனைவர்கள் பங்களிப்பதோடு சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல் சுதந்திரமாக வாழவும் தேசிய வளர்ச்சி பங்களிக்கிறது என்றார் சமூகம், பொதுநலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினருமான பீ புன் போ அவர்கள்.

இத்தொழிலியல் கண்காட்சியில் 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் 5 பொதுநல அமைப்புகளும் இடம்பெற்றது. இதனிடையே, சில தொழிற்சாலைகள்  நேர்முக தேர்வை நடத்தினர் என்பது பாராட்டக்குறியதாகும். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல் ஊனமூற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான ஒரு எதிர்காலத்தைத் தேடினர்.

அதோடு, சட்டமன்ற உறுப்பினர் பீ புன் போ அவர்கள் இன்னும் பொதுநல துறையில் பதிவுப் பெறாதவர்களை உடனடியாக பதிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில், பினாங்கு மாநில அரசு அவர்கள் இலவச கார் நிறுத்தம், ஊக்கத்தொகை போன்ற அரிய சலுகைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும். விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கான அட்டையைப் பெற முடியும் என உறுதிக்கொடுத்தார்.

 

பினாங்கு இளம் அனைத்துலக ஐக்கிய சங்கத்தின் உடல் ஊனமுற்றோர் தொழிலியல் கண்காட்சி 2013 ஏற்பாட்டு குழுவினருடன் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ அவர்கள்.
பினாங்கு இளம் அனைத்துலக ஐக்கிய சங்கத்தின் உடல் ஊனமுற்றோர் தொழிலியல் கண்காட்சி 2013 ஏற்பாட்டு குழுவினருடன் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ அவர்கள்.