பெண்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? -தினேஷ் குமார்

மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொடர்ச்சியாக மலேசியர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதன் முக்கியத்துவமும் வாக்களிக்கும் அவசியத்தைப் பற்றியும் கலந்துரையாடப்படுகிறது. மலேசியர்கள் வாக்களிப்பதை நினைவுக்கூறும் வகையில் எண்ணற்ற கட்டுரைகள், வானொலி அறிவிப்புகள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒளிப்பரப்படுகின்றன.

அதில் குறிப்பிட்ட சில விளம்பரங்கள் மட்டுமே பெண்கள் வாக்காளர்களை இலக்காக கொண்டு ஒளிப்பரப்பப்படுகிறது. இதன் மூலம் குடிமக்களாக தனது கடமையில் இருந்து விடுப்படும் பெண்கள் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்.

பெண்கள் ஒரு குடிமகளாக வாக்களிக்கும் தனது கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி விவாதிப்பதற்கு முன், வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதற்கு எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றனர் என ஆலோசிக்க வேண்டும்.

முதலாவதாக, ஓர் அரசியல் கட்சியின் குறிக்கோள்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டுகோளாக அமைகிறது. சுய மதிப்பீடு கொண்ட கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். உதாரணமாக, மேற்கத்திய பழமைவாதிகள் பழமையான கட்சிக்கு வாக்களிப்பர். ஏனெனில் இக்கட்சிகள் வரிவிதிப்பு எதிர்ப்பு, பாரம்பரிய குடும்ப பின்னணி, குடிநுழைவு கட்டுப்பாடு, ஆகிய கூறுகள் கொண்டிருக்கும். உதாரணமாக, ஒருவர் திருமணம் என்பது ஆண் பெண் இடையிலான உறவு மேன்மை என நம்பிக்கை கொண்டால் அந்த எண்ணத்தை பிரதிபலிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பர்.

இரண்டாவதாக, வாக்காளர்கள் வாக்களிக்கும்  போது ஒரு கட்சியின் வரலாற்று மிக்க பங்களிப்பையும் கருத்தில் கொள்வர். உதாரணமாக, இந்நாட்டில் மலாய்க்காரர்களில் பெருபான்மையினர் அம்னோ கட்சிக்கு ஆதரவு வழங்குவர். ஏனெனில், 1950-ஆம் ஆண்டுகளில் இக்கட்சி  பிரிட்டிஷ் மலயான் கட்சியுடன் சண்டையிட்டு இந்நாட்டிற்கு சுதந்திரம் பெற போராடியது. உலகத்திலே  சிங்கப்பூர் நாட்டில் மட்டுமே ஆளும் கட்சியான மக்கள் செயற்கட்சி தொடர்ந்து ஆட்சி புரிந்து வருகிறது. இந்நாட்டை உருவாக்க இக்கட்சியின் பங்கு அளப்பறியது. ஐக்கிய நாடுகளில் தொழிற்கட்சிக்கு இன்னமும் குடிமக்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பராமரிக்கிறது, ஏனெனில் பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்கும், தேசிய சுகாதார சேவைகள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் (NHS) ஸ்தாபிக்கப்பட்ட பங்களிப்பிற்கும் இக்கட்சி பங்களித்துள்ளது.

மலேசியாவில் பெண்கள் வாக்காளர்களின் வாக்களிப்பு முறைகள் அவர்களின் வயது, இனம், குறிக்கோள், போக்குகள் போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கல்லூரியில் பயிலும்  பெண்கள் குறிப்பிட்ட கட்சி  கல்லூரிக்  கட்டணத்தை குறைப்பதாகவும் அல்லது மாணவர் கல்வி கடன்களுக்கு முழு விலக்கு அளித்தால் அக்கட்சிக்கே ஆதரவு தெரிவிப்பர். முதியோர்கள்  தங்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்புத் திட்டங்களைப் பாதுகாக்கும் உறுதிமொழியைக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க முனைகின்றனர். இனவாத சிறுபான்மை குழுக்களில் உள்ள பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளான சிறப்பு உரிமை, வேலைவாய்ப்பு , கல்வி வாய்ப்பு ஆகிய கூறுகளைப் பாதுகாக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். சுதந்திர பெண்கள் நிதி நிறுவனங்களையும் அதன் அமைப்பையும் பாதுகாக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பர். ஒரு ஜனநாயக சமூகத்தில் பெண்கள் வாக்காளர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது மிக அவசியம், இந்த அறிக்கையை ஆதரிக்க பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக ஒரு வாக்களிப்பு பெண்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சரியான கட்சிக்கான வாக்களிப்பு, பணிப்புரியும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான  ஊதியங்கள், பாலியல் பிரச்சனையில் இருந்து விடுப்படுதல், பெண்களுக்கான  தொழிலாளர் பிரதிநிதித்துவம், தொழிலாளர் சங்கம்ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். குழந்தைகள்  கொண்ட குடும்பமாதுகள் மளிகைக்குக் குறைந்த செலவு, குழந்தைகளுக்கு சிறந்த சுகாதார பாதுகாப்பு, சிறந்த கல்வி முறை அல்லது வேலையற்ற தாய்மார்களுக்கு சமூகநலத் திட்டங்கள் மூலம் வாக்களிக்க முனைகின்றனர்.

பெண்கள் வாக்காளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க முடியாது. எனவே, வாக்காளர் என்ற உரிமையில் சிறந்த மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் . பெண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நலனில் மிகுந்த அக்கரை செலுத்துவர்.

இறுதியாக, பெண்கள் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வாக்களிக்க முன்வர வேண்டும். பெண்களின் வாக்களிப்பு ஒரு சிறந்த நாட்டை உருவாக்க இயலும். எனவே, பெண்கள் அனைவரும் வாக்களிக்க ஊக்குவிக்கப்படுவதோடு அவர்களின் வாக்குகளின் அவசியத்தை அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு நாட்டின் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும்.