பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் மக்கள் கூட்டணி ஆட்சி மலர்ந்தது

வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் (உடன் பினாங்கு மாநில முதல்வர் மற்றும் மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள்)
வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் (உடன் பினாங்கு மாநில முதல்வர் மற்றும் மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள்)

நாடு முழுவதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் மீண்டும் மக்கள் கூட்டணி அரசு ஆட்சிப் பீடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது. மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்) சார்பில் போட்டியிட்ட டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மொத்தம் 30,316 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சுஹைமி சபுடின் 21,475 பெற்று தோல்வியடைந்தார். இந்த இடைத்தேர்தல் நான்கு முனைபோட்டியாக விளங்கினாலும், தேசிய முன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்குமிடையே கடுமையானப் போட்டி நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 8,841 பெரும்பான்மை வாக்குகள் பெற்று பெர்மாத்தாங் பாவ் மக்கள் கூட்டணியின் அசைக்க முடியாத கோட்டை என மறு உறுதிப்படுத்தப்பட்டது. இத்தொகுதியை இம்முறையாவது கைப்பற்றுவோம் என்ற தேசிய முன்னணியின் கனவு சிதைந்தது.
இந்த நான்கு முனைப் போட்டியில், மலேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சார்பில் அஸ்வான் ஷா ஒஸ்மான் மற்றும் சுயேட்சை வேட்பாளராக சாலே இஷாஹாக் ஆகியோரும் போட்டியிட்டனர். அன்றைய தினத்தில் காலை மணி 8.00-க்குத் தொடங்கி வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டு, வாக்காளர்கள் மும்முரமாக வாக்களித்தனர். பி.கே.ஆர் வேட்பாளர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா, ஶ்ரீ பெனாந்தி தேசியப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றபோதிலும், கட்சி ஆதாரவாளர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சலசலப்புகள் ஏற்பாட்டன. காவல் துறை இறுதியில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். டத்தோஶ்ரீ அன்வார் ஓரிணப்புணர்ச்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் இடைத்தேர்தல் இடம்பெற்றது. மக்கள் கூட்டணி அரசு மலாய்க்காரார்களுக்கு மேம்பாட்டுத் திட்டத்திற்கானக் குத்தகைகள் வழங்குவதில்லை எனப் பல அவதூறுகள் கூறிய தேசிய முன்னணிக்குத் தகுந்த புள்ளி விபரங்கள் சமர்ப்பித்து உண்மையை நிலைநிறுத்தினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்த இடைத்தேர்தலில் பி.கே.ஆர் கட்சி வெற்றிப் பெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மக்கள் கூட்டணி குறிப்பாக பினாங்கு அரசுத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்கள் கூட்டணியின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினர் என்றால் மிகையாகாது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள்.
தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக டத்தோஶ்ரீ வான் அஸிஸா வெற்றிப்பெற்றார் என அறிவித்தது.
தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக டத்தோஶ்ரீ வான் அஸிஸா வெற்றிப்பெற்றார் என அறிவித்தது.

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு சிலாங்கூர் மாநில முதலமைச்சர் மதிப்பிற்குரிய முகமது அஸ்மின் அலி பினாங்கு மாநிலத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டார். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வெற்றிப்பெற்ற டத்தோஶ்ரீ வான் அஸிஸா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை மலர்க் கொத்து வழங்கி தெரிவித்துக் கொண்டார்.

இது மக்கள் கூட்டணியின் வெற்றி அல்ல பொது மக்களின் அபார வெற்றி எனப் புகழாரம் சூட்டினார். மக்கள் பிரதிநிதியான நான் பொருள் சேவை வரி, 1 மலேசிய மேம்பாட்டு நிறுவன பிரச்சனை, கைப்பேசி முன்கட்டண சேவைவரி ஆகிய அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பேன் எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் டத்தோஶ்ரீ வான் அஸிஸா.