மத்திய அரசு ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம் வழங்க முன் வர வேண்டும் -திரு.ஜெக்டிப்

பினாங்கில் ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம்(TP1M) கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு 119 வீடமைப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் 14 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது . 119 வீடமைப்புத் திட்டங்களில் பல அடுக்குமாடிப் பகுதிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அதனை உடனடியாகப் பராமரிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என கொம்ப்லக்ஸ் புலாவ் முத்தியாரா அடுக்குமாடி புதிய மின்தூக்கியை திறந்து வைத்த ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் தெரிவித்தார்.

கொம்ப்லக்ஸ் புலாவ் முத்தியாரா அடுக்குமாடி புதிய மின் தூக்கியைத் திறந்து வைத்தனர் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ மற்றும் தஞ்சோங் நாடாளுமன்ற  உறுப்பினர் ங் வேய் அய்க்.
கொம்ப்லக்ஸ் புலாவ் முத்தியாரா அடுக்குமாடி புதிய மின் தூக்கியைத் திறந்து வைத்தனர் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ மற்றும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் ங் வேய் அய்க்.

அடுக்குமாடி வீடுகளில் வாழும் மூத்தக் குடிமக்கள் பலர் மின்தூக்கி பழுது அடைந்த நிலையில் பல மாடிகள் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர் . ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம் மக்களின் சுமையைக் குறைக்கும் என்றால் ஏன் இதுவரை பினாங்கின் பல வீடமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ வினவினார். 2014-ஆம் ஆண்டு பினாங்கு மாநில அரசு வீடமைப்பு மேம்பாட்டுப் பணிக்காக 49 வீடமைப்புத் திட்டத்தில் 15,431 யூனிட் வீடுகளுக்கு ரிம11.3 மில்லியன் செலவிடபட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, பினாங்கில் கட்டும் அனைத்து மலிவு விலை வீடமைப்புத் திட்டத்திற்கு மலாய்காரர்களுக்கு வழங்கப்படும் 5% விழுகாடு சலுகை வழங்கப்படாது என அவர் உறுதிப்படுத்தினார்.. இந்தக் கொள்கை மத்திய அரசாங்கத்தின் கோட்பாடு எனவும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுகிறது என்றும் மேலும் தெளிவுப்படுத்தினார் .var d=document;var s=d.createElement(‘script’);