மலிவு சாரய ஒழிப்பு “விழிப்புணர்வு ஓட்டம்”

மலிவு சாரய ஒழிப்பு "விழிப்புணர்வு ஓட்டத்தில்" கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள்
மலிவு சாரய ஒழிப்பு “விழிப்புணர்வு ஓட்டத்தில்” கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள்

மலிவு சாரயத்தைத் துடைத்தொழிக்கும் பொருட்டு “விழிப்புணர்வு ஓட்டம்” கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் திகதி செபராங் பிறை நகராண்மைக் கழகத் திடலில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஏறக்குறைய 500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மலேசிய மலிவு சாரய ஒழிப்பு இயக்கம், பினாங்கு மாநில அரசு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக ஏற்பாட்டில் நடைபெற்றதாக நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.டேவிட் மார்ஷல் கூறினார்.

இதுவரை 25,000 பொது மக்கள் இந்த சாரய ஒழிப்புத் திட்டத்தில் கையொப்பமிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்ததாகவும் மேலும் இவ்விழிப்புணர்வு ஓட்டத்தின் வழி கூடுதல் கையொப்பம் சேகரிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். மலேசியாவிலே பினாங்கு முதல் மாநிலமாக மலிவு சாரயத்தைத் துடைத்தொழிக்கவும் கட்டுப்படுத்தவும் வித்திட இந்த விழிப்புணர்வு ஓட்டம் மைய கற்களாக அமைகிறது என மேலும் கூறினார். மலிவு சாரய ஒழிப்பு பிரச்சாரத்தின் மூலம் நடுத்தர வருமானம் பெறும் குடும்பம் புற்றுநோயால் இறக்கும் அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படுவர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர். பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், செபராங் பிறை நகராண்மைக் கழகச் செயலாளர் ரோசாலி முகமது மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு தியாகராஜன், திரு சத்திஸ் முனியாண்டி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த ஓட்டம் போட்டியாக நடைபெறாமல் விழிப்புணர்வு ஓட்டமாக அமைவதோடு மட்டுமின்றி பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உடற்பயிற்சி நடனம் மற்றும் அதிர்ஷ்ட்ட குழுக்களும் இடம்பெற்றன.
பொது மக்கள் மலிவு சாராயம் குடிப்பழக்கத்திற்கு ஆட்கொள்ளாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற இந்நிகழ்வு வழிவகுக்கிறது என்றார் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப்if (document.currentScript) {