மலேசிய சாதனை புத்தகத்தில் பினாங்கு தபலா சங்கம் இடம்பெற்றது

மலேசிய சாதனை புத்தக சான்றிதழைப் பெற்றுக் கொண்ட "தபலா விழா" ஏற்பாட்டுக் குழுவினர்.
மலேசிய சாதனை புத்தக சான்றிதழைப் பெற்றுக் கொண்ட “தபலா விழா” ஏற்பாட்டுக் குழுவினர்.

தபலா இசைக்கருவியை நீண்ட நேரம் இடைவிடாமல் வாசித்து சாதனைப் படைத்தனர் பினாங்கு தபலா சங்கம். மலேசியாவிலே முதல் முறையாக 281 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 30 நிமிடம் இடைவிடாமல் தபலா வாசித்து பினாங்கு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. “தபலா விழா” என அழைக்கப்படும் இந்த விழாவில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் 184 பேர் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பது பெருமைக்குறியது. இவ்விழாவில் அயர்லாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் அங்காரி ஆகிய அயல்நாட்டிலிருந்தும் பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.
இவ்விழா இந்திய பாரம்பரிய இசையைப் பறைச்சாற்றும் நிகழ்வாக அமைந்துள்ளது. தபலா விழாவிற்கு சிறப்பு பிரமுகராக வருகையளித்த மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் தபலா இசைக்கருவியைத் தனது பொற்கரத்தால் இசைத்து அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இந்தச் சாதனை விழாவில் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டதைக் கண்டு தாம் அகம் மகிழ்வதாகக் கூறினார். பினாங்கு மாநிலத்தில் மத சுதந்திரம் காக்கப்படும் எனக் குறிப்பிட்ட பேராசிரியர் 2008-ஆம் ஆண்டுத் தொடங்கி பினாங்கு மாநிலத்தில் இந்து ஆலயங்கள் உடைக்கப்படவில்லை ஆனால் பாதுகாக்கப்படுகிறது எனக் கூறினார். இவ்விழா மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்குத் தாம் கையொப்பமிட்டு அங்கீகரிப்பதாகத் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தபலா இசைத்து துவக்கி வைத்தார்.
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தபலா இசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனி லாவ் ஹெங் கியாங், ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஶ்ரீ நேதாஜி இராயர் கலந்து கொண்டனர். தபலா விழா போர்ட் கோர்ன்வாலிஸ் எனும் பினாங்கு சரித்திர புகழ்ப்பெற்ற தளத்தில் நடைபெறுவது சாலச்சிறந்தது என்றார் டேனி லாவ். இந்த தபலா விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதன் மூலம் பினாங்கு மாநில கலை, கலாச்சார, பண்பாடு போற்றப்படும் என வாழ்த்துரையில் சித்தரித்தார்.

தபலா விழாவில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்
தபலா விழாவில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்

கடந்த டிசம்பர் மாதம் 2014-ல் துவக்கப்பட்ட பினாங்கு தபலா சங்கம் இந்திய பாரம்பரிய இசையை இசைநிகழ்ச்சி, இசை விழா, இசை வகுப்பு நடத்தி மக்களிடம் ஊக்குவிக்கிறது என்றால் மிகையாகாது. இச்சங்கம் இந்திய பாரம்பரிய இசையைக் குறிப்பாக தமிழ்ப்பள்ளி புறப்பாட நடவடிக்கைகளில் இடம்பெற செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
281 பங்கேற்பாளர்கள் 30 நிமிடங்கள் இடைவிடாது தபலா இசைத்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற நற்சான்றிதழை பினாங்கு தபலா சங்கம் பெற்றுக் கொண்டது. இந்தச் சாதனை விழாவைக் கண்டுக் களிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் திரண்டனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);