மாநில அரசின் போக்குவரத்து திட்ட ஒப்பந்தம் பரிமாற்றம்

எதிர்கால தலைமுறையினர் போக்குவரத்து நெரிசலில் அகப்படாமல் இருக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் ஒரு கடல் வழி சுரங்கப்பாதையை அமைக்கத் திட்டம் வகுத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் திறந்த விலை ஒப்பந்தத்தின் மூலம் ரிம 6.34 பில்லியன் விலைக்கு  கொன்செர்தியும் செனிட் (Contortium Zenith),  சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவனம் (China Railway Construction Ltd), கட்டுமானப் பணியை கூட்டுமுயற்சியில் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் கொன்சோர்த்தியும் செனிட் (Contortium Zenith),  சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவன (China Railway Construction Ltd) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சாரூல் அகமது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் கொன்சோர்த்தியும் செனிட் (Contortium Zenith), சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவன (China Railway Construction Ltd) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சாரூல் அகமது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

 

எனவே, அக்டோபர் 6-ஆம் திகதி மாநில அரசு மற்றும் கொன்செர்தியும் செனிட் (Contortium Zenith) & சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவனம் (China Railway Construction Ltd), பெய்ஜிங் உர்பான் கட்டுமானம் (Beijing Urban Contruction Group)  உடன் முதல்கட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்த உடன்பாட்டில் மேம்பாட்டு நிறுவன சார்பில் தலைமை இயக்குநர்களும், மாநில அரசு சார்பில் முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்களும் கையொப்பமிட்டனர். இதன் மூலம் மேம்பாட்டு நிறுவனம் இத்திட்டத்தைப் பற்றியச் செயலாக்க ஆய்வுகள் மற்றும் விரிவான வடிவமைப்பு வேலை செயல்படுத்த வழி வகுக்கப்படுகிறது.

 

 

 

 

 

இத்திட்டத்தில் கீழ்க்காணும் மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் ஒரு கடல் வழி சுரங்கப்பாதையை 2025-ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படவுள்ளன.

  • தஞ்சோங் பூங்கா- தெலுக் பகாங் இருவழிப் பாதை : 12 கி.மீ தூரம் நான்கு பிரிவுகள் கொண்ட பாதை
  • ஆயர் ஈத்தாம் – துன் டாக் லிம் சோங் ஈயூ துணை வழிப்பாதை: 2019-ஆம் ஆண்டுக்குள் 4.6 கி.மீ விரைவுப்பாதைக் கட்டப்படும்
  • பெர்சியாரான் கெர்னி- துன் டாக் லிம் சோங் ஈயூ துணை வழிப்பாதை: 2022-ஆம் ஆண்டுக்குள் 4.2 கி.மீ விரைவுப்பாதைக் கட்டப்படும்
  • மூன்றாவது சுரங்கப்பாதை இணைப்பு: 2025-ஆம் ஆண்டுக்குள் 6.5 கி.மீ கடல் வழி சுரங்கப்பாதை அமைக்கப்படும்

 

இந்த போக்குவரத்து திட்டத்தின் 70% கட்டுமானப் பணியை கொன்செர்தியும் செனிட் (Contortium Zenith) & சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவனமும் (China Railway Construction Ltd), ஏணைய 30% கட்டுமானப் பணியை பெய்ஜிங் உர்பான் கட்டுமானம் (Beijing Urban Contruction Group) நிறுவனம்  மேற்கொள்ளும்.

இந்த போக்குவரத்து திட்டம் பினாங்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு மற்றும் வட செபெராங் பிறை விரைவுப்பாதை இணைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி வளர்ச்சிக்காணும் என்பது திண்ணம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டத்தினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படும் என மாநில முதல்வர் வாக்குறுதியளித்தார். இந்த போக்குவரத்து திட்டம் இனிதே நிறைவுப்பெற்று பினாங்கு வாழ் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுபுள்ளியாகத் திகழும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.